தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்து, தொடர்ந்து 2வது நாளாக உயர்துள்ளது. சவரன் மீண்டும் ரூ.39ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்து, தொடர்ந்து 2வது நாளாக உயர்துள்ளது. சவரன் மீண்டும் ரூ.39ஆயிரத்தைக் கடந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 24 ரூபாயும், சவரனுக்கு ரூ.192 விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,890க்கும், சவரன் ரூ.39,120க்கும் விற்பனை ஆனது.
கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி: வங்கிக் கடன் வசூலிப்போருக்கு கடிவாளம் போட்ட ரிசர்வ் வங்கி
இன்று காலை தங்கம் விலை 2-வது நாளாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.24 அதிகரித்து, ரூ.4,914ஆகவும், சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ரூ.39,312க்கும் விற்பனையாகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4914ஆக விற்கப்படுகிறது.
தங்கம் விலை இந்த வாரம் முழுவதும் கடும் ஏற்ற, இறக்கத்துடனே இருந்தது. முதல் இரு நாட்கள் உயர்வு, அதன்பின் சரிவு, பின்னர் மீண்டும் விலை ஏற்றம் என மாறி,மாறி இருந்தது. நீண்ட நாட்களுக்குப்பின் சவரன் ரூ.39ஆயிரத்தை கடந்த நிலையில்மீண்டும் ரூ.38ஆயிரத்துக்குள் வந்தது. இந்நிலையில் இந்று சவரனுக்கு ரூ.192 அதிகரித்து, மீண்டும் ரூ.39ஆயிரத்தைக் கடந்தது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 2023லிருந்து பவுடர் விற்பனையை நிறுத்துகிறது
தங்கம் விலை எவ்வளவு மாறும் என்று கணிக்க முடியாத நிலையில் தினசரி விலை நகர்கிறது. சர்வதேசஅளவில் பெரிதாக பதற்றமான நிகழ்வுகள் ஏதும் இல்லை என்பதால், இனிமேல் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கும். இதனால் வரும் நாட்களில் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் பாய்ந்தது மத்திய அரசு அதிரடி
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 80 பைசா அதிகரித்து ரூ.64.80 ஆகவும், கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ.64,800க்கும் விற்கப்படுகிறது.