dal price rise:பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் பாய்ந்தது மத்திய அரசு அதிரடி

By Pothy Raj  |  First Published Aug 13, 2022, 7:29 AM IST

பருப்பு விலை தொடர்ந்து உயர்ந்துவருவதையடுத்து, பதுக்கலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் பருப்பு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 


பருப்பு விலை தொடர்ந்து உயர்ந்துவருவதையடுத்து, பதுக்கலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் பருப்பு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 

இதன் படி பருப்பு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்துக்குள் கொண்டு வந்துள்ள மத்திய அரசு,  விலைவாசியைக் காண்காணிக்கவும், பதுக்கல்களில் வர்த்தகர்கள் ஈடுபடுகிறார்களா, இருப்புகளை கண்காணிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.

Tap to resize

Latest Videos

ராகுல் காந்தி வரிசையில் அரவிந்த் கெஜ்ரிவால்.. இவரும் பொருளாதார மேதை தான் - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

நாட்டின் ஜூலை மாத சில்லரைப் பணவீக்கப் புள்ளிவிவரங்கள் நேற்று இரவு வெளியாகின. அந்த புள்ளிவிவரங்கள் வெளியாவதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் மத்தியஅரசு இந்த அராசணையை வெளியிட்டது.

ஜூலை மாதத்தில் சில்லரை விலைப் பணவீகக்ம் 6.71 சதவீதமாக உயர்ந்ததுள்ளது. ஏப்ரல் மாதத்திலிருந்து 7 சதவீதமாகஉயர்ந்த நிலையில் இருந்தது, தற்போது குறை்துள்ளது. இருப்பினும் இன்னும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்துக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம் குறைந்துவரும் நிலையில் அடுத்துவரும் பண்டிகை காலத்தில் பருப்பு வகைகள் விலை உயர்ந்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு கவனத்துடன் இருக்கிறது. ஜூலை முதல் துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 2023லிருந்து பவுடர் விற்பனையை நிறுத்துகிறது

அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கரீப் பருவத்தில் அதிகமான மழை, மழைநீர் வயல்களில் தேங்கியதால், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு விளைச்சல் பாதி்க்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு அடுத்துவரும் மாதங்களில் வரத்து குறைய வாய்ப்புள்ளது.

இதைப்பயன்படுத்தி, வர்த்தகர்கள் செயற்கை விலைவாசி உயர்வை உண்டாக்கி, விலையை உயர்த்திவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது.இருப்பினும் உள்நாட்டு சந்தையில் பருப்பு வகைகள் போதுமான அளவு இருப்புஇருக்கிறது. தற்போது 38லட்சம் டன் பருப்பு வகைகள் இருப்பதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாடகை வீட்டில் குடியிருப்போர் 18% ஜிஎஸ்டி வரி செலுத்த தேவையில்லை: மத்திய அரசு விளக்கம்

தொடர்ந்து பருப்பு வகைகளி்ன் விலையை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கூர்ந்து கண்காணிப்போம், ஏதேனும் திடீரென விலைவாசி உயர்ந்தால் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்துள்ளது. பருப்பு வர்த்தகர்களிடம் இருந்து வாரந்தோறும் கையிருப்பு இருக்கும் பருப்பு விவரங்களை பெறுமாறு மாநிலங்களுக்கம், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

click me!