Johnson & Johnson: Baby Powder:talc ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பவுடர் விற்பனையை நிறுத்துகிறது

By Pothy Raj  |  First Published Aug 12, 2022, 5:07 PM IST

குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 2023ம் ஆண்டிலிருந்து தனது விற்பனையை நிறுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது. 
 


குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 2023ம் ஆண்டிலிருந்து தனது விற்பனையை நிறுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது. 

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தும் ஆஸ்படாஸ் எனும் வேதிப்பொருள் கலந்திருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமெரிக்காவில் பல நீதிமன்றங்களில் வழக்கு நடந்தது. பல சட்டப் போராட்டங்களுக்குப்பின் அமெரிக்கா, கனடாவில் விற்பனை நிறுத்தப்பட்டது.

Tap to resize

Latest Videos

வாடகை வீட்டில் குடியிருப்போர் 18% ஜிஎஸ்டி வரி செலுத்த தேவையில்லை: மத்திய அரசு புதிய விளக்கம்

இந்நிலையில் 2023ம் ஆண்டிலிருந்து ஒட்டுமொத்தமாக பேபி பவுடர் விற்பனையை நிறுத்துவதாக ஜான்சன் அன்ட் ஜான்சன் அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டஅறிக்கையில் “ எங்களின் குழந்தைகளுக்கான அனைத்து டால்கம் பவுடரையும் இனிமேல் சோளமாவு பவுடருக்கு மாற்றப் போகிறோம். எங்களின் பொருட்கள் பாதுகாப்பானவை. 

நீண்ட காலத்துக்கு எது வளர்ச்சிக்குரியது என்று பார்த்து, மதிப்பீடு செய்து பொருட்களைத் தயாரிக்கிறோம். இன்று உலகளவில் அனைத்துக் காரணிகளையும் ஆய்வு செய்தோம், எங்களின் பொருட்களுக்கான தேவை, வேறுபாடுகள், நுகர்வோர் மனநிலை ஆகியவற்றை ஆய்வுசெய்தோம். அந்த ஆய்வின் முடிவில், 2023ம்ஆண்டிலிருந்து எங்கள் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடர் விற்பனை நிறுத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.

வாடகை வீட்டில் குடியிருப்போர் 18% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டுமா? புதிய விதி என்ன சொல்கிறது

ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் இந்த அறிவிப்பு வெளியிட்ட பின் பங்குச்சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்கு 2.3% சரிந்தது. 

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரில் ஆஸ்படாஸ் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதாகக் கூறி, கடந்த 2020, மே மாதம் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.

இதையடுத்து, அமெரிக்கா, கனடாவில் பவுடர் விற்பனையை ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் நிறுத்தியது. அந்த நிறுவனம் இதுவரை 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை சந்தித்தது. சட்டப்போராட்டங்களை நடத்த முடியாமல் வெறுப்படைந்தது.

முந்தப்போவது யார்? ரிலையன்ஸ் ஜியோ-வுக்குப் போட்டியாக இம்மாதமே 5ஜி சேவை: ஏர்டெல் அறிவிப்பு

கடந்த ஆண்டு திவால் நோட்டீஸ் கூட கேட்க முயற்சி எடுத்தது. தங்களுக்கு எதிரான வழக்குகளைச் சமாளிக்க மட்டுமே 200 கோடி டாலர் நிதியை ஜான்சன் அன்ட் ஜான்சன் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. ஜான்சன் அண்ட் ஜான்சன் இதுவரை நிவாரணமாக 350 கோடி டாலர் வழங்கியுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

click me!