கடந்த 7 ஆண்டுகளில் பேஸ்புக் பயன்பாடு 71 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்று அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் பேஸ்புக் பயன்பாடு 71 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்று அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பியூ ரிசார்ச் சர்வே நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2014-15ம் ஆண்டில் அமெரிக்க பதின்பருவத்தினர்(13-17) மத்தியில் பேஸ்புக் பயன்பாடு 71 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது அது 32 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
10 நாட்களில் ஒரு கோடி தேசியக் கொடி விற்று இந்தியா போஸ்ட் சாதனை
சீனாவின் வீடியோ செயலியான டிக்டாக் வருகைதான் இளைஞர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பேஸ்புக் பயன்பாட்டை பெருவாரியாகக் குறைத்துள்ளது. அதிலும் டிக்டாக், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட் போன்றவற்றின் வருகை பேஸ்புக் சரிவுக்கு காரணமாகும்.
டிக்டாக்கை எப்போதாவது பயன்படுத்துவதாக 67சதவீத பதின் பருவத்தினர் தெரிவித்துள்ளனர், 16 சதவீதம் பேர் மட்டுமே தொடர்ந்து டிக்டாக்கை பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
2022ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் யூடியூப் இளைஞர்கள், பதின்வயதினர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 95 சதவீதம் பேர் யூடியூப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
2022ம் ஆண்டின் கடைசி ‘சூப்பர் மூன்’ இன்று வானில் தெரியும்: பெயர் என்ன? தமிழகத்தில் பார்க்க முடியுமா?
டிக்டாக் செயலிக்கு அடுத்த இடத்தில் இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட் போன்றவற்றை 10 இளைஞர்களில் 6 பேர் பயன்படுத்துகிறார்கள். இதில் பேஸ்புக் 32 சதவீதம் மட்டுமே இருக்கிறது. ட்விட்டர், ட்விட்ச், வாட்ஸ்அப், ரெடிட், டம்பிளர் ஆகியவையும் குறிப்பிடத்தகுந்த பங்கைப் பெற்றுள்ளன.
டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆகியவற்றின் வருகைதான் பேஸ்புக் வருவாய், பயன்பாட்டை வீழ்ச்சி அடையவைத்தமைக்கு முக்கியக் காரணமாகும். இதில் இன்ஸ்டாகிராம், டிக்டாக் ரீல்ஸ் மூலம் வருவாய் 100 கோடி டாலர் வருகிறது என ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் சரிவு குறித்து ஆய்வு கூறுகையில் “ 2014-15ம் ஆண்டுக்குப்பின், டிக்டாக் வெளியானபின்புதான் பேஸ்புக் பயன்பாடு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இளைஞர்கள் மத்தியில் பேஸ்புக் பயன்பாடு குறைந்து, இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. ட்விட்டர், டம்பிளர் ஆகியவற்றின் பயன்பாடும் குறைந்துள்ளது.
இந்த ஆய்வில் முக்கியமாக கவனிக்கும் விதத்தில், யூடியூப், ட்விட்ச், ரெடிட் போன்ற செயலிகளை பதின்பருவத்தில் இருக்கும் பெண்களைவிட ஆண்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால்,டிக்டாக், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட்டை ஆண்களைவிட பெண்கள் அதிகமாகப்பயன்படுத்துகிறார்கள்.
கறுப்பினத்தவர்கள், ஹிஸ்பானிஸ் இளைஞர்கள் மத்தியில் டிக்டாக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், வாட்ஸ் ஆகியவற்றைய வெள்ளையின இளைஞர்களைவிடஅ திகமாகப் பயன்படுத்துகிறார்கள்.
35% பதின்பருவத்தினர், டிக்டாக் அல்லது ஸ்நாப்சாட் இதில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பயன்படுத்துவதாக தெரிவிததுள்ளனர். அதைத் தொடர்ந்து யூடிப்பை பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்-பில் 4 புதிய வசதி: குரூப்பைவிட்டு சத்தமில்லாமல் வெளியேறலாம்
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் பதின்மவயிதில் உள்ளவர்களில் 19 சதவீதம் பேர் யூடியூப்பையும், 16சதவீதம் பேர் டிக்டாக், 15 சதவீதம் பேர் ஸ்நாப்சாட்டை தொடர்ந்து பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.