பிரதமர் கிசான் சம்மன் நிதியுதவித் திட்டத்தில் விவசாயிகள் அந்த திட்டம் பற்றி செல்போன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
பிரதமர் கிசான் சம்மன் நிதியுதவித் திட்டத்தில் விவசாயிகள் அந்த திட்டம் பற்றி செல்போன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
நாட்டில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு பிஎம் கிசான் சம்மன் உதவித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் 3 தவணைகளாக விவசாயிகளின் சேமிப்புக் கணக்கில் அரசு நேரடியாக செலுத்தும்.
சீனாவுக்கு அடுத்த செக்: ரூ.12 ஆயிரத்துக்கு குறைவாக ஸ்மார்ட்போன் இனி கிடையாது
இதுவரை 11 தவணைகளை மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. கடந்த மே 31ம் தேதி 11வது தவணையை பிரதமர் மோடி விவசாயிகளுக்கு வழங்கினார். 12வது தவணை வரும் நம்பர் மாதம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
ரூ.18,000 கோடி இழப்பு: இந்தியன் ஆயில், ஹெச்பிசிஎல், பிபிசிஎல் நிறுவனங்கள்: என்ன காரணம்?
பிஎம் கிசான் திட்டத்தில் எவ்வளவு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது, புதிய அறிவிப்புகள் ஏதும் வந்துள்ளதாக,அடுத்த தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்பது குறித்து விவசாயிகள் இதற்கு முன் pmkisan.gov.in என்ற இணையதளத்தில் சென்றுதான் பார்க்க முடியும்.
இனிமேல், விவசாயிகளின் செல்போனுக்கே முக்கிய அப்டேட் ஏதும் இருந்தால் தெரிவிக்கும் முறையை மத்திய அரச கொண்டுவர உள்ளது. இதன்படி இணையதளத்துக்குச் சென்று விவசாயிகள் தங்கள் செல்போன் எண்ணைப் பதிவுசெய்தால் இனிமேல் திட்டம் பற்றி அப்டேட்கள் உடனுக்குடன் வரும்.
எவ்வாறு செல்போன் எண்ணைப் பதிவுசெய்வது
1. Pmkisan.gov.in இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
2. பயனாளிகள் பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்.புதிய பேஜ் திறக்கும்
3. அதில் விவசாயி தங்கள் விவரத்தை பதிவு செய்ய வேண்டும். அதாவது பதிவு எண் அல்லது செல்போன் எண்ணை பதிவு செய்யலாம்.
மதம்சார்ந்த, தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விடுதிகளுக்கு (sarais) ஜிஎஸ்டி இல்லை: சிபிஐசி அறிவிப்பு
4. திரையில்தோன்றும் கேப்சா கோடை டைப் செய்ய வேண்டும்
pm kissa5. அதன்பின் ஓ.கே செய்தால், நம்முடைய விவரங்களைப் பெறலாம்.