
தங்கம் விலையில் இன்று உயர்ந்துள்ளது. இந்த வாரம் முழுவதும் கடும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு ரூ.40 விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,885க்கும், சவரன் ரூ.39,080க்கும் விற்பனை ஆனது.
முந்தப்போவது யார்? ரிலையன்ஸ் ஜியோ-வுக்குப் போட்டியாக இம்மாதமே 5ஜி சேவை: ஏர்டெல் அறிவிப்பு
இன்று காலை தங்கம் விலை இன்றும் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.4,890ஆகவும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.39,120க்கும் விற்பனையாகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4890ஆக விற்கப்படுகிறது.
தங்கம் விலை இந்த வாரம் கடும் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. முதல் இருநாட்கள் திடீரென விலை உயர்ந்து சவரனுக்கு 348 ரூபாய்க்கு மேல் உயர்ந்து பின்னர் அடுத்த இருநாட்களில் சவரனுக்கு ரூ.288 குறை்துள்ளது. நீண்ட நாட்களுக்குப்பின் சவரன் ரூ.39ஆயிரத்தை கடந்த நிலையில் நேற்று காலை மீண்டும் ரூ.38ஆயிரத்துக்குள் சரிந்தது. இதனால் தங்கம் விலை ஊகிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது.
கவுதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் முடிவு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையிலும் பெரிதாக மாற்றம் இல்லை, அமெரிக்க பணவீக்கம் உயர்வாக இருந்தாலும், முன்பு இருந்த அளவைவிட குறைந்துள்ளது, பெடரல் வங்கிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், மீண்டும் இந்தியாவுக்குள் அந்நிய முதலீடுகள் வரத் தொடங்கியுள்ளன, தங்கத்தன் மீதான முதலீடு அதிகரி்க்கத் தொடங்கிள்ளது. இதனால்தான் தங்கத்தின் விலை தொடர்ந்து நிலையில்லாமல் இருந்து வருகிறது.
சீனாவுக்கு அடுத்த செக்: ரூ.12 ஆயிரத்துக்கு குறைவாக ஸ்மார்ட்போன் இனி கிடையாது
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 பைசா குறைந்து ரூ.64.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.64,000க்கும் விற்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.