jio vs airtel: 5g: முந்தப்போவது யார்? ரிலையன்ஸ் ஜியோ-வுக்குப் போட்டியாக இம்மாதமே 5ஜி சேவை: ஏர்டெல் அறிவிப்பு

By Pothy Raj  |  First Published Aug 11, 2022, 1:21 PM IST

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் 5ஜி சேவையை இந்த மாதத்திலேயே தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் 5ஜி சேவையை இந்த மாதத்திலேயே தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடந்தது. இதில் ரூ.1.50 கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிந்தது, ரூ.4.50 லட்சம் வரை எதிர்பார்க்கப்பட்டநிலையில் மிகவும் குறைந்தது. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டும், ரூ.88 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக செலவிட்டு ஏலத்தில் 5ஜி அலைக்கற்றையை வாங்கியுள்ளது.

Tap to resize

Latest Videos

மிரட்ட வரும் ரிலையஸ் ஜியோ: 1000 நகரங்களில் 5ஜி பணி முடிந்தது: 22 பெருநகரங்களில் அறிமுகம்

இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன்ஐடியா ஆகிய நிறுவனங்களுக்குஇடையே கடும் போட்டி இருந்தது. அதிலும் உத்தரப்பிரதேசம் கிழக்கு மண்டலத்தைப் பிடிக்க ஏர்டெல், ஜியோ இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த 1000 நகரங்களில் பணியை முடித்துவிட்டதாகத் தகவல் வெளியானது. முதல்கட்டமாக 22 நகரங்களில் சேவைத் தொடங்கப்போவதாகவும் தெரிவி்த்துள்ளது.

ஆனால், எப்போது ரிலையன்ஸ் 5ஜி சேவை தொடங்கும் என்பது தெரியவி்ல்லை. ஆகஸ்ட் 15ம் தேதி ஜியோ 5ஜி சேவை தொடங்கப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன

ரூ.725 கோடிக்கு குஜராத் போர்டு நிறுவனத்தை வாங்கியது டாடா குழுமம்

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு போட்டியாக, இந்த மாதமே 5ஜி சேவையைத் தொடங்கப் போவதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் கூறுகையில் “ ஏர்டெல் நிறுவனம் இந்த மாதத்திலேயே 5ஜி சேவையை அறிமுகப்படுத்த இருக்கிறது.2024ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாட்டின் அனைத்து கிராமங்கள், நகரங்களிலும் 5ஜி சேவையை கொண்டு வர முடியும் என்று நம்புகிறோம். 5ஜி ஏலத்தில் பார்தி ஏர்டெல் செயல்பட்டவிதம் வரலாற்றில் சிறப்பான தருணம்” எனத் தெரிவி்த்தார்

சீனாவுக்கு அடுத்த செக்: ரூ.12 ஆயிரத்துக்கு குறைவாக ஸ்மார்ட்போன் இனி கிடையாது

ஆனால், 5ஜி சேவை எப்போது தொடங்கும், தேதி குறித்து கோபால் விட்டல் தெரிவிக்கவில்லை. 5ஜி சேவை குறித்த கட்டண விவரமும் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சந்தையைப்பிடிக்கும் முன்பாக களத்தில் இறங்க ஏர்டெல் நிறுவனமும் ஆயத்தமாகி வருகிறது. இந்த 5ஜி ரேஸில் யார் முந்தப் போகிறார்கள் எனப் பார்க்கலாம்.
 

click me!