ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1000 நகரங்களில் 5ஜி சேவை தொடங்குவதற்கான பணிகளை முடித்துவிட்டது. முதல் கட்டமாக 22 பெருநகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1000 நகரங்களில் 5ஜி சேவை தொடங்குவதற்கான பணிகளை முடித்துவிட்டது. முதல் கட்டமாக 22 பெருநகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடந்தது. இதில் ரூ.1.50 கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிந்தது, ரூ.4.50 லட்சம் வரை எதிர்பார்க்கப்பட்டநிலையில் மிகவும் குறைந்தது. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டும், ரூ.88 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக செலவிட்டு ஏலத்தில் 5ஜி அலைக்கற்றையை வாங்கியுள்ளது.
கவுதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் முடிவு
இந்நிலையில் 5ஜி சேவையை யார் முதலில் தொடங்குவது என்ற போட்டி உருவாகியுள்ளது. ஏர்டெல், வோடபோன்ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையைத் தொடங்க ஆயத்தமாகி வருகின்றன.
ஏர்டல் நிறுவனம் இந்த மாதத்திலேயே 5ஜி சேவையைத் தொடங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதற்கு முன்கூட்டியே 5ஜி சேவையைத் தொடங்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது.
ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டுஅறிக்கை சனிக்கிழமை வெளியிடப்படுகிறது.
மக்கள் பணம் ரூ.96 கோடியை மோசடி செய்த அஞ்சல ஊழியர்கள்: சிஏஜி அறிக்கையில் ஷாக்
அந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை குறித்து விரிவாக விளக்கப்பட உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ வட்டராங்கள் கூறுகையில் “ ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை 1000 நகரங்களில் 5ஜி சேவை தொடங்குவதற்கான பணிகளை முடித்துவிட்டது.
முதல்22 பெருநகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படஉள்ளது. ஹீட் மேப், 3டிமேப், ரே ட்ரேசிங் டெக்னாலஜி, கவரேஜ் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை இழுத்து, வருவாயைப் பெருக்க திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவிக்கின்றன
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு புதிய சிஇஓவாக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். தேசம் 75வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் வேளையில் 5ஜி சேவையை தொடங்குவோம் என்று ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரூ.725 கோடிக்கு குஜராத் போர்டு நிறுவனத்தை வாங்கியது டாடா குழுமம்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட் தலைவர் கிரண் தாமஸ் கூறுகையில் “ முதல்கட்டமாக 9 நகரங்களி்ல 5ஜி சேவை தொடங்கப்படஉள்ளது. மும்பை, நவி மும்பை, ஜாம்நகர், ஹைதராபாத், லக்னோ உள்ளிட்ட நகரங்களில் சேவை அறிமுகமாகும். இந்தநகரங்களி்ல் 5ஜி சோதனைஓட்டம் முடிந்துவிட்டது.
இது தவிர 6ஜி சேவைக்கான ஆய்வுகளிலும், மேம்படுத்தும் பணியிலும் பின்லாந்தில் உள்ள ஒலு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ செயல்பட்டு வருகிறது.