
தங்கம் விலையில் மீண்டும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. வாரத்தின் முதல் இரு நாட்கள் தங்கத்தின் விலையில் உயர்வு இருந்த நிலையில் தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 33 ரூபாயும், சவரனுக்கு ரூ.264 விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
வாட்ஸ் அப்-பில் 4 புதிய வசதி: குரூப்பைவிட்டு சத்தமில்லாமல் வெளியேறலாம்
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,893க்கும், சவரன் ரூ.39,144க்கும் விற்பனை ஆனது.
இன்று காலை தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.33 குறைந்து, ரூ.4,860ஆகவும், சவரனுக்கு ரூ.264 சரிந்து, ரூ.38,880க்கும் விற்பனையாகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4860ஆக விற்கப்படுகிறது.
மக்கள் பணம் ரூ.96 கோடியை மோசடி செய்த அஞ்சல ஊழியர்கள்: சிஏஜி அறிக்கையில் ஷாக்
தங்கம் விலை இந்த வாரம் உயர்வுடன் தொடங்கி இரு நாட்களில் மட்டும் சவரனுக்கு 348 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த இரு நாட்களில் சவரனுக்கு ரூ.288 குறை்துள்ளது. நீண்ட நாட்களுக்குப்பின் சவரன் ரூ.39ஆயிரத்தை கடந்த நிலையில் இன்று மீண்டும் சவரன் ரூ.38ஆயிரத்துக்குள் வந்துள்ளது.
தங்கம் விலை ஊகிக்க முடியாத நிலையில் இருக்கிறது. இந்த வாரத்தில் இரு நாட்கள் விலை உயர்ந்தும், இரு நாட்கள் விலை குறைந்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை எளிய முறையில் இணைக்கலாம்! இதைப் படியுங்கள்
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 பைசா குறைந்து ரூ.64.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.64,000க்கும் விற்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.