
தங்கம் விலை கடந்த 2 நாட்களாக உயர்ந்த நிலையில் இன்று சரிந்துள்ளது. இந்த சரிவு நீடிக்குமா அல்லது மீண்டும் உயருமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 7 ரூபாயும், சவரனுக்கு ரூ.56 விலை குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,900க்கும், சவரன் ரூ.39,200க்கும் விற்பனை ஆனது.
வாட்ஸ் அப்-பில் 4 புதிய வசதி: குரூப்பைவிட்டு சத்தமில்லாமல் வெளியேறலாம்
இன்று காலை தங்கம் விலை திடீரெனக் குறைந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.7 குறைந்து, ரூ.4,893ஆகவும், சவரனுக்கு ரூ.56 சரிந்து, ரூ.39,144க்கும் விற்பனையாகிறது.
மக்கள் பணம் ரூ.96 கோடியை மோசடி செய்த அஞ்சல ஊழியர்கள்: சிஏஜி அறிக்கையில் ஷாக்
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4893ஆக விற்கப்படுகிறது.
தங்கம் விலை இந்த வாரம் உயர்வுடன் தொடங்கி இரு நாட்களில் மட்டும் சவரனுக்கு 348 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப்பின் சவரன் ரூ.39ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த 1ம் தேதி சவரன் ரூ.38,360ல் இருந்தது, கடந்த 8 நாட்களில் சவரனுக்கு ரூ.680 அதிகரித்து தங்கம் விலை ஏறுமுகத்தில் பயணிக்கிறது. இந்நிலையில் கடந்த வாரத்திலிருந்து முதல்முறையாக தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை இனிமேல் படிப்படியாக அதிகரிக்குமா அல்லது விலை குறையுமா என்று ஊகிக்க முடியாத அளவில் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தம்: ஹெச்பிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.10,196 கோடி இழப்பு
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 பைசா குறைந்து ரூ.64.20 ஆகவும், கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.64,200க்கும் விற்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.