chinese smartphone ban in india: சீனாவுக்கு அடுத்த செக்: ரூ.12 ஆயிரத்துக்கு குறைவாக ஸ்மார்ட்போன் இனி கிடையாது

By Pothy RajFirst Published Aug 9, 2022, 12:51 PM IST
Highlights

இந்தியாவில் செயல்படும் உள்நாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்களைக் காப்பாற்றும் வகையில் , ரூ.12 ஆயிரத்துக்கு குறைவாக சீன செல்போன்கள் விற்பனைக்கு தடைவிதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் செயல்படும் உள்நாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்களைக் காப்பாற்றும் வகையில் , ரூ.12 ஆயிரத்துக்கு குறைவாக சீன செல்போன்கள் விற்பனைக்கு தடைவிதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியா எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட மோதலுக்குப்பின் சீனாவுக்கு பல நெருக்கடிகளை மத்திய அரசு கொடுத்து வருகிறது. 300க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கும், கேம்களுக்கும் தடை விதித்தது. 

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை எளிய முறையில் இணைக்கலாம்! இதைப் படியுங்கள்

சீன நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அரசு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. இதுபோன்று பொருளாதார ரீதியாக சீனாவுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டன. ஆனால், சீன நிறுவனங்களான ஜியோமி, ஓபோ, விவோ போன்ற செல்போன்கள் இந்தியாவில் விலை குறைவான, பல்வேறு வசதிகள் கொண்ட, தரமான செல்போன்கள் தயாரித்து விற்பனைக்கு வந்தபின் உள்நாட்டு செல்போன்கள் காணாமல் போயின. குறிப்பாக கார்பன், மைக்ரோமேக்ஸ் மொபைல்கள் விற்பனை வீழ்ச்சி அடைந்தது. 

இதற்கிடையே சீனாவைச் சேர்ந்த ஏராளமான செல்போன்கள் நிறுவனங்கள், பல்வேறு நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தம்: ஹெச்பிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.10,196 கோடி இழப்பு

இந்தத் தகவலின் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு, சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் சீன நிறுவனங்களில் சோதனை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள், கோடிக்கணக்கில் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் உள்நாட்டில் உற்பத்தி ஈடுபடும் இந்திய செல்போன் நிறுவனங்களைக் காக்கும் முயற்சியில் ரூ.12 ஆயிரத்துக்கு குறைவான ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு மத்திய அரசு தடைவிதிக்க திட்டமிட்டுள்ளது என்று அமெரி்க்காவின் ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.12 ஆயிரத்துக்கும் குறைவான செல்போன்களை சீன நிறுவனங்கள் தயாரிக்கக்கூடாது என்பது அரசின் திட்டமாகும். ரூ.10ஆயிரத்துக்குள் ஏராளமான வசதிகளுடன் சீன நிறுவனங்கள் செல்போன்களை விற்பனை செய்தன. இனிமேல் 12 ஆயிரத்துக்கு மேல்தான்செல்போன்களை தயாரிக்க முடியும்.

இன்னும் 6 மாதங்களுக்கு விலைவாசி உயர்வு குறையாது: ரிசர்வ் வங்கி கவர்னர் கணிப்பு

12ஆயிரத்துக்கும் குறைவாக இந்தியாவில் விற்பனையாகும் செல்போன்களில் 80% சீன செல்போன்கள்தான். இதனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் செல்போன்கள்விற்பனை குறைந்துவிட்டது, அந்த நிறுவனங்களும் பெரும் இழப்பைச் சந்திக்கின்றன.

இந்த செய்தி ப்ளூம்பெர்க்கில் வெளியானவுடன் ஹாங்காங் சந்தையில் ஜியோமி பங்கு மதிப்பு 3.6 % சரிந்தது. இந்த ஆண்டில் மட்டும் ஜியோமி பங்கு மதிப்பு 35சதவீதம் சரிந்துள்ளது. 
இந்த நடவடிக்கையால் ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. இந்த செல்போன்கள் விலை அதிகம் என்பதால் இந்த நிறுவனங்களுக்கு சிக்கல் இல்லை. 

click me!