வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும்பணியைத் தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்ட நிலையில் எளிதாக ஆன்லைனில் இணைக்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும்பணியைத் தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்ட நிலையில் எளிதாக ஆன்லைனில் இணைக்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நீண்ட நாட்களாகக் கூறி வந்தது.
இவ்வாறு இணைக்கும்பட்சத்தில் போலி வாக்காளர்களைக் கண்டுபிடிக்க முடியும், ஒருவர் இரு தொகுதிகளில் வாக்களிப்பதைத் தடுக்கலாம், இரு தொகுதிகளில் பெயர் பதிவாகியிருந்தாலும் அது நீக்கப்படும். இதனால் ஜனநாயகத்தில் வாக்களிக்கும் முறையில் நேர்மையான நிலை கடைபிடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது.
இதையடுத்து, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1ம்தேதி முதல் தொடங்கியுள்ளது, 2023ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்தப் பணி பல்வேறு மாநிலங்களிலும் பணி வேகமெடுத்துள்ளது.
இந்நிலையில் சேவை மையத்துக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே ஆன்-லைன் மூலம் ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை எளிதாக இணைத்துவிடலாம். வாக்களார்கள் ஆதார் எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரம் மாநிலம் தோறும் செய்து வருகிறது. தேசிய வாக்காளர் சேவை, வோட்டர் ஹெல்ப்லைன் ஆப்ஸ் ஆகியவை மூலமும் வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கலாம்.
டீசல் தட்டுப்பாடு.. அரசு பேருந்துகள் சேவை திடீர் நிறுத்தம் - பொதுமக்கள் பாதிப்பு !
அதேசமயம், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமல்ல. வாக்காளர் விருப்பப்பட்டால் மட்டுமே ஆதார் எண்ணை அரசிடம் பகிர்ந்து, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம். தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க விரும்பவில்லை என்பதற்கு காரணங்கள் இருந்தால் கட்டாயமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
நேரடியாக எவ்வாறு இணைப்பது
தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பதிவாளர் அதிகாரி அலுவலகத்துக்குச் சென்று ஃபார்ம்6பி(form6b) படிவத்தை வாங்கி வாக்காளர் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, ஆதார் எண்ணை குறிப்பிட்டு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்படும்.
சூடுபிடிக்கும் பிஹார் அரசியல்!பாஜக-வை கைகழுவுங்க:நிதிஷ் குமார்-க்கு லாலு கட்சி அழைப்பு
ஆன்-லைன் மூலம் இணைப்பது எப்படி
1. voterportal.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்துக்குச்ச செல்ல வேண்டும்.
2. உங்கள் மின்அஞ்சல், வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது, செல்போன் எண் ஆகியவற்றின் மூலம் லாகின் செய்யலாம்.
3. எந்த மாநிலம், மாவட்டம், தாலுகா ஆகியவற்றையும், பெயர், பிறந்ததேதி, தந்தை பெயர் ஆகியவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.
4. அதன்பின் சேர்ச் பட்டனை அழுத்த வேண்டும்.(அவ்வாறு அழுத்தினால், நீங்கள் பதிவுசெய்த விவரங்களும் அரசின் பதிவேட்டில் இருக்கும் விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பது தெரியவரும்)
5. அதன்பின் கணினியின் இடதுபக்க திரையில் “பீட் ஆதார் நம்பர்”(feed aadhar no) என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
6. திரையில் வரும் பகுதியில் ஆதார் எண், ஆதார் கார்டு பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், மொபைல் நம்பர், மின்அஞ்சல் முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்
மின்சார சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே அறிமுகம்
7. அனைத்து விவரங்களையும் சரிபார்த்தபின் சப்மிட் செய்யலாம்.
8. நீங்கள் பதிவு செய்த விவரங்கள் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் திரையில் வரும். அதன்பின் இணைக்கப்படும்.