பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் நிறுத்தி வைத்திருப்பதால், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.18ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் நிறுத்தி வைத்திருப்பதால், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.18ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பைப் பங்குச்சந்தையில் இந்த 3 எண்ணெய் நிறுவனங்களும் பைலிங்கில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளன. பெட்ரோல், டீசல், வீடுகளுக்கு பயன்படும் சமையல் சிலிண்டர் ஆகியவற்றின் சந்தை இறுதிநிலைவிலைக்கும் குறைவாக விற்பதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளன.
கடந்த 4 மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பெரியஅளவு அதிகரித்த போதிலும் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய அரசு கேட்டுக்கொண்டதால், பெட்ரோல், டீசல் விலையை இந்தியன் ஆயில், ஹெச்பிசிஎல், பிபிசிஎல் நிறுவனங்கள் திருத்தி அமைக்கவில்லை.
ஆனால், சமையல் சிலிண்டர் விலையையும் திருத்தி அமைக்கவில்லை. கடந்த ஜூலை 29ம்தேதி நிலவரப்படி, ஏப்ரல் ஜூன் காலாண்டில், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு ரூ.1995 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு முதல் காலாண்டில் ரூ.10,196 கோடி இழப்பும், பிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.6,290 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களுக்கும் சேர்ந்து ரூ.18,480 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்தியன் ஆயில், பிபிசிஎல், ஹெச்பிசிஎல் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கவில்லை. பணவீக்கம் 7 சதவீதத்துக்கும் மேல் இருந்ததால், விலை திருத்தி அமைக்காமல் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு பேரல் 109டாலராக இருக்கிறது. ஆனால், பெட்ரோல், டீசல் விலையை கச்சா எண்ணெய் விலை பேரல் 86 டாலர் அளவில்தான் விற்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல்விலையை திருத்தி அமைக்கப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சந்தை விலைக்கும் குறைவாக பெட்ரோல்,டீசல், சமையல் சிலிண்டரை விற்பதால்தான் இந்த 3 நிறுவனங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.