gold rate today: தங்கம் விலை திடீர் உயர்வு: சவரன் ரூ.39ஆயிரத்தை நெருங்குகிறது: இன்றைய நிலவரம் என்ன?

Published : Aug 08, 2022, 10:00 AM ISTUpdated : Aug 08, 2022, 10:11 AM IST
gold rate today: தங்கம் விலை திடீர் உயர்வு: சவரன் ரூ.39ஆயிரத்தை நெருங்குகிறது: இன்றைய நிலவரம் என்ன?

சுருக்கம்

வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. சவரன் ரூ.39ஆயிரத்தை இந்த வாரத்தில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. சவரன் ரூ.39ஆயிரத்தை இந்த வாரத்தில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு ரூ.40ம் விலை உயர்ந்துள்ளது. 
 சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,845க்கும், சவரன் ரூ.38,7600க்கும் விற்பனை ஆனது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தம்: ஹெச்பிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.10,196 கோடி இழப்பு

இன்று காலை தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5 அதிகரித்து, ரூ.4,850ஆகவும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.38,800க்கும் விற்பனையாகிறது. 

கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4850ஆக விற்கப்படுகிறது. 

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் மனைவியும் அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜர்

இந்த வாரம் தங்கம் விலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கத்தின் விலையில் கடும் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. கடந்தவாரம் தங்கம் கிராம் ரூ.4,795ல் தொடங்கியது, வார இறுதியான சனிக்கிழமையன்று, கிராம் ரூ.4,845க்கு முடிந்தது.

இடைப்பட்ட நாட்களில் தங்கம் கிராம் ரூ.4,865 வரை சென்று சரிந்தது. கடந்த வாரத்தில் கிராமுக்கு ரூ.50 மட்டுமே மாறுதல் ஏற்பட்டது. சவரனுக்கு ரூ. 400 அளவில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டது.

கடந்த 1ம் தேதி சவரன் ரூ.38,360ல் இருந்தது, சனிக்கிழமை மாலை சவரன் ரூ.38,760ஆக இருந்தது. ஏறக்குறைய 400 ரூபாய் மட்டுமே மாற்றம் ஏற்பட்டது. இந்த வாரத்தில் டாலரின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை நிலவரம் ஆகியவற்றைப் பொறுத்து தங்கத்தின் விலையி்ல் மாற்றம் இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் தங்கம் சவரன் ரூ.39ஆயிரத்தைத் தொடங்குவதற்கு 
இந்த வாரத் தொடக்கத்திலிருந்து தங்கம் விலை கடும் ஏற்ற இறக்கத்துடன் நகர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை சரிந்தும், இரு நாட்களாக விலை அதிகரித்தும் இருக்கிறது.  

இன்னும் 6 மாதங்களுக்கு விலைவாசி உயர்வு குறையாது: ரிசர்வ் வங்கி கவர்னர் கணிப்பு

ஏறக்குறைய கிராமுக்கு 30 ரூபாயிலும், சவரனுக்கு 240 ரூபாயிலும் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக இன்றுதங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தங்கம் விலை இனிமேல் படிப்படியாக அதிகரிக்குமா அல்லது விலை குறையுமா என்று ஊகிக்க முடியாத அளவில் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.

வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.63.00 ஆகவும், கிலோ ரூ.63000க்கும் விற்கப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!