பெட்ரோல், டீசல் விலையை கடந்த இரு மாதங்களாக உயர்த்தாமல் இருப்பதால், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ஜூன் மாதம் முடிந்த முதல் காலாண்டில் ரூ.10,196.94 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை கடந்த இரு மாதங்களாக உயர்த்தாமல் இருப்பதால், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ஜூன் மாதம் முடிந்த முதல் காலாண்டில் ரூ.10,196.94 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பைப் பங்குச்சந்தையில் ஹெச்பிசிஎல் நிறுவனம் தாக்கல் செய்த பைலிங்கில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஏப்ரல்-ஜூன் மாதம் முடிந்த முதல் காலாண்டில் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1795 கோடியாக அதிகரித்துள்ளது.
சுதந்திரத்துக்குப்பின் இந்திய பொருளாதாரத்தின் 10 முக்கிய சாதனைகள்
நாட்டில் பணவீக்கம் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து மத்தியஅரசு கேட்டுக்கொண்டதையடுத்து, ஹெச்பிசிஎல், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல் விலையை கடந்த 2 மாதங்களாக உயர்த்தவில்லை.
இதனால் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் பேரல் 109 டாலருக்கு வாங்கி, அதை பேரல் 86 டாலர் மதிப்பில் சில்லரையில் பெட்ரோல், டீசல் விற்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருப்பதால், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கும் முதல் காலாண்டில் ரூ.1992 கோடி இழப்பு ஏற்பட்டது.
gold rate today: தங்கம் விலை சரிவு: சவரனுக்கு 160 ரூபாய் குறைவு: இன்றை நிலவரம் என்ன?
ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் ரூ.1.21 லட்சம் கோடியாகும்.இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.77,308 கோடியாக இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவே வருவாய் அதிகரித்துள்ளது.
அதேநேரம், பெட்ரோல் டீசல் விலையை உயர்வை நிறுத்தி வைத்திருப்பதால், ஏற்பட்ட இழப்பு என்பது இதுவரை எந்த காலாண்டிலும் சந்திக்காத இழப்பாகும்.
அதுமட்டுமல்லாமல் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவால் கூடுதலாக ரூ.945 கோடி அந்நியச் செலவாணியை ஹெச்பிசிஎல் நிறுவனம் செலவழிக்க வேண்டியிருந்தது
மதம்சார்ந்த, தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விடுதிகளுக்கு (sarais) ஜிஎஸ்டி இல்லை: சிபிஐசி அறிவிப்பு
5 மாநிலத் தேர்தல் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையைஉயர்த்தாமல் இருந்த எண்ணைய் நிறுவனங்கள் அதன்பின் உயர்த்தின. பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது.
அதன்பின் கடந்த மே மாதம் மத்திய அரசு பெட்ரோல்,டீசலுக்கு உற்பத்தி வரியைக் குறைத்தது. அதன்பின் கடந்த 122 நாட்களாக பெட்ரோல், டீசல்விலை மாற்றமில்லாமல் தொடர்கிறது.