கடந்த 1947ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டுச் செல்லும்போது நம்நாட்டின் மக்கள் தொகை 34 கோடி. பொருளாதாரம் மிகவும் நலிந்தநிலையில், கல்வியறிவு வெறும் 12 சதவீதம் மட்டுமே இருந்தது.
கடந்த 1947ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டுச் செல்லும்போது நம்நாட்டின் மக்கள் தொகை 34 கோடி. பொருளாதாரம் மிகவும் நலிந்தநிலையில், கல்வியறிவு வெறும் 12 சதவீதம் மட்டுமே இருந்தது.
இந்தியாவின் ஜிடிபி 2.70 லட்சம் கோடியாக இருந்தது உலக ஜிடிபியில் இந்தியாவின் பங்கு வெறும் 3 சதவீதம் மட்டும்தான் அப்போதுஇருந்தது. தற்போது ரூ.135 லட்சம் கோடி ஜிடியாக மாறிவிட்டது.
சுதந்திரம் பெறும்போது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.1029 கோடி. ஆனால், தற்போது உலகளவில் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகம் வைத்திருக்கும் 5-வது நாடாக இந்தியா இருக்கிறது.
ரயில்வே துறையில் 68 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்தின்போது 40ஆயிரம் கிலோமீட்டருக்கு சாலை அமைக்கப்பட்ட நிலையில் தற்போது 16 மடங்கு அதிகரித்து 64 லட்சம் கிலோமீட்டருக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1950ம் ஆண்டில் ஏறக்குறைய 3ஆயிரம் கிராமங்களுக்கு மட்டுமே மின்சார வசதி இருந்தது. தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 1948ம் ஆண்டு இந்தியாவுக்கு வெறும் ரூ.248 கோடிதான் அந்நிய முதலீடாக வந்தது. ஆனால், 2020-21ம் ஆண்டில் 8,172 கோடி டாலர் அந்நிய முதலீடாக வந்தது.
கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடியை ஏறக்குறைய எட்டியுள்ளது. கல்வியறிவு 78 சதவீதத்தை எட்டியுள்ளோம். இந்தியாவின் ஜிடிபி 8.7 சதவீதமாக வளர்ந்துள்ளது. இந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் அசுரத்தனமான வளர்ச்சிக்கு இதுவே சாட்சி.
இது தவிர உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ வசதிகள், போக்குவரத்து வசதிகள், தொழிற்துறை, கல்விநிலையங்கள், வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்துப் பிரிவுகளிலும் இந்திய உலக நாடுகளுக்கு இணையாக போட்டியிடுகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை, சேவைத்துறையில் இந்தியாவின் வளர்ச்சி மிகப்பெரியது. ஏழை நாடு எனச் சொல்லப்பட்ட இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்அதிபர் முகேஷ் அம்பானி, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி ஆகியோர் உலகக் கோடீஸ்வரர்களில் டாப் 10 இடங்களில் உள்ளனர்.
ரிசர்வ் வங்கி நாட்டுடமை
இந்திய ரிசர்வ் வங்கிதான், நாட்டின் நிதிஅமைப்பு, செயல்முறையின் கண்காணிப்பாலர். கடந்த 17ம்நூற்றாண்டில் இருந்தே சென்ட்ரல் வங்கி இருந்தாலும், 20ம் நூற்றாண்டில்தான் நவீனம்பெற்றது. இந்தியப் பிரிவினைக்குப்பின், 1948ம் ஆண்டு ஜூன் வரை ரிசர்வ் வங்கி பாகிஸ்தானில்தான் செயல்பட்டது. பாகிஸ்தானில் ஸ்டேட் வங்கி செயல்படத் தொடங்கியபின்புதான் ரிசர்வ் வங்கி இந்தியாவில் தனியாக 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்டு தேசியஉடைமையாக்கப்பட்டது.
5 ஆண்டு திட்டங்கள்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆனிவேராக இருந்தது 5 ஆண்டு திட்டங்கள். ஒவ்வொரு 5 ஆண்டு திட்டங்களிலும் குறிப்பிட்ட பொருளாதார இலக்கை அடிப்படையாகவைத்து இந்தியா முன்னோக்கி நகர்த்தப்பட்டது. 5 ஆண்டு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டபின்புதான் மக்களின் வாழ்க்கைதரம் மேம்பட்டது. உற்பத்தி பெருகியது, வேலைவாய்ப்பு கிடைத்தது. ஒன்றுபட்ட சோவியத் யூனியனிடம் இருந்து முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த திட்டங்களின் சிந்தனையின் ஆக்கத்தைப் பெற்றார்.
முதன்முதலில் 1951ல் ஹரூத்-தோமர் மாடல் அடிப்படையில் முதல்5 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டக்குழுவின் தலைவராக முன்னாள் பிரதமர் நேரு இருந்தார். குல்சாரிலால் நந்தா துணைத்தலைவராக இருந்தார். வேளாண் வளர்ச்சி, அகதிகளுக்கு மறுவாழ்வு, பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி ஆகிய இலக்குகள் ஒவ்வொரு 5 ஆண்டு திட்டங்களிலும் வைக்ககப்பட்டன.
உயர்ந்த விளைச்சல் தரக்கூடிய நெல், கோதுமை ரகங்கள் பயிரிடப்பட்டபின்புதான், நாட்டில் வறுமை குறைந்தது. நாட்டின் வளர்ச்சியை கைதூக்கிவிட்ட 5 ஆண்டு திட்டங்கள் கடந்த 2015ம் ஆண்டு நீக்கப்பட்டு, நிதிஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு.இந்தியாவின் எதிர்கால இலக்கு, வளர்ச்சி, திட்டமிடல், கூட்டாச்சி கூட்டறவு ஆகியவற்றை அடிப்படையாகவைத்து இயங்குகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உருவாக்கம்
கடந்த 1955ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி இந்திய அரசு இம்ப்ரீயல் பேங்க் ஆப் இந்தியாவை தேசிய உடமையாக்கியது. இம்ப்பீரியல் வங்கி கடந்த 1921ம் ஆண்டு, ஜனவரி 27ம் தேதி உருவாக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி 60 சதவீத பங்குகளை வைத்துக்கொண்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி உருவானது.
ரிசர்வ் வங்கி இந்தியாவில் உருவாக்கப்படாத காலத்தில், இம்ப்ரீயல் வங்கிதான் மத்திய வங்கியாக ஆங்கிலேயர் காலத்தில் செயல்பட்டது. தற்போது ஸ்டேட் வங்கியின் கீழ் 14 வங்கிகள் உள்ளன. 2020ம் ஆண்டு 10 அரசு வங்கிகள் 4 வங்கிகளாக இணைத்து மாற்றப்பட்டன. முதலில் 18தேசிய வங்கிகள் இருந்தநிலையில் தற்போது 12 ஆகக் குறைந்துவிட்டது.
தொழிற்கொள்கை உருவாக்கம்
கடந்த 1956ம்ஆண்டு தொழிற்கொள்கை உருவாக்கம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் கடும் விதிமுறைகளுடன்,கண்காணிப்படுன் கூடிய லைசன்ஸ்ராஜ்ஜாக தொழிற்கொள்கை இருந்தது. தொழிற்துறைச் சட்டம் 1951 கொண்டுவரப்பட்டு முதல் பட்டியலில் 38 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டன. 1991ம் ஆண்டு பொருளதார தாராளமயமாக்கல் வந்தபின் தனியார், வெளிநாட்டு முதலீடு இந்தியாவில் வரத் தொடங்கியது.
ஏர் இந்தியா நாட்டுடமை
கடந்த 1932ம் ஆண்டு ரத்தன் டாட்டாவால் கராச்சி இடையே முதல் விமானப்ப போக்குவரத்து தொடங்கியது. ஆனால், 1953ம் ஆண்டு ஏர் இந்தியா நாட்டுடமை ஆக்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏர் இந்தியா அரசின்வசம் இருந்தது. உள்நாட்டு விமானப் போக்குவரத்தின் பெரும்பகுதி ஏர் இந்தியா வசம் இருந்தது. 69 ஆண்டுகளுக்குப்பின் ஏர் இந்தியா மீண்டும் டாடாவின் வசம் 2022, ஜனவரி 27ம் தேதி சென்றது.
இந்திய சாலையின் அரசன் அம்பாசிடர்
இந்திய சாலைகளின் அரசன் எனச் சொல்லப்படும் அம்பாசிடர் கார் முதன் முதலில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தால்கடந்த 1958ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. கொல்கத்தாவில் உள்ள உத்தரப்பாரா தொழிற்சாலையில் அம்பாசிடர் கார் தயாரிக்கப்பட்டது. முதன்முதலில் அம்பாசிடர் கார், மோரிஸ் ஆக்ஸ்போர்ட் சீரிஸ்3 மாடலைத் தழுவியை உருவாக்கப்பட்டது.
அதன்பின் மாருதிஉத்யோக் நிறுவனம் கடந்த 1977ம் ஆண்டு உருவானது. நாட்டின் நடுத்தரக் குடும்பத்து மக்களை இலக்கு வைத்து மாருதி நிறுவனம் கார்களைத் தயாரித்தது. ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனமான சுஸூகியுடன் இணைந்து மாருதி கார்களை தயாரித்து இந்திய சந்தையில் அசைக்க முடியாத நிறுவனமாக மாறியது. 766சிசி திறனில் மாருதி 800 காரை மாருதிசூஸுகி நிறுவனம் நிறுவனம் 1983ம் ஆண்டு அறிமுகம்செய்தது.
முதல் துறைமுகம் கான்ட்லா துறைமுகம்
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் கான்ட்லா துறைமுகம் முதன்முதலாக உருவாக்கப்பட்டது. இந்த துறைமுகத்தின் உண்மையான பெயர் தீனதயாளன் துறைமுகம். நாட்டின் முதல் துறைமுகமான கான்ட்லா உதயமானபின்புதான் மும்பை துறைமுகம் உருவாக்கப்பட்டது.
டெல்லி முதல் கேரளா, கர்நாடகாவுக்கு ரயில்
புது டெல்லியிலிருந்து கேரளா, கர்நாடகாவுக்கு நேரடியாக முதல்முதலில் ஜெயந்தி ஜனதா எஸ்க்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இதற்கு மற்றொருபெயர் மங்களா லட்சத்தீவு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸாகும். 1973ம்ஆண்டு ஜனவரி 26ம் தேதி அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த டிஏ பாய் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். டெல்லியிலிருந்து தினசரி கேரளா, கர்நாடகா, லட்சத்தீவுகளுக்குச் செல்லும் ரயிலாக பின்னர் மாறியது.
முதல் கச்சா எண்ணெய் எடுப்பு
மும்பையில் உள்ள சாஹர் சம்ரட் பகுதியில் முதன்முதலில் கச்சா எண்ணெய் எடுக்கும் மையம் கடந்த 1974ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மும்பை கடற்பகுதியிலிருந்து 176கி.மீ தொலைவில் இந்த எண்ணெய் எடுக்குமிடம் இருந்தது. ஓஎன்ஜிசி கண்காணிப்பில் இந்தப்பணிகள் நடந்தன.
முதல் உருக்கு ஆலை
ஜெர்மனியின் உதவியுடன் ரூர்கேலா உருக்கு ஆலைதான் நாட்டின் முதல், அரசாங்க உருக்காலை. இந்த ஆலையின் உற்பத்தி திறன் 10லட்சம் டன்னாகும். சிறிது நாட்களில் இதன்திறன் 20லட்சம் டன்னாகவும், அதிகரிக்கப்பட்டது. அதன்பின் நவீனத்துவம், புதிய தொழில்நுட்ப வருகையால் உற்பத்தி 45 லட்சம் டன்னாக மாறியது.
இந்தியப்பங்குச்சந்தை உருவாக்கம்
ஆசியாவின் முதல் பங்குச்சந்தை மும்பை பங்குச்சந்தையாகும். கடந்த 1875ம் ஆண்டு பருத்தி வியாபாரி பிரேம்சந்த் ராய்சந்த் என்ற ராஜஸ்தானி ஜெய் வியாபாரியால் மும்பை பங்குச்சந்தை மரத்தடியில் உருவாக்கப்பட்டது. அதன்பின் பங்குபத்திர ஒழுங்குமுறைச்சட்டம் 1956ல் உருவாக்கப்பட்டு முறையாக மும்பைப் பங்குச்சந்தை உருவானது.