
மதம்சார்ந்த, தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் சரஸ் எனப்படும் ஓய்விடங்கள், தங்கும் விடுதிகளில் உள்ள அறைகளுக்கான கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்று மத்திய நிதிஅமைச்சகம் திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் நடந்த 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஹோட்டல்களில், தங்கும் விடுதிகளில் தினசரி ரூ.1000க்குள் வாடகை இருக்கும் அறைகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இந்த வரிவிதிப்பு அமிர்தசரஸில் இருக்கும் பொற்கோயிலுக்கு அருகே உள்ள சரஸ் விடுதிகளுக்கும் பொருந்தும் எனக் கூறப்பட்டது.
rbi policy: repo rate:இன்னும் 6 மாதங்களுக்கு விலைவாசி உயர்வு குறையாது: ரிசர்வ் வங்கி கவர்னர் கணிப்பு
இந்த ஜிஎஸ்டி வரி பஞ்சாப், ஹரியானாவில் உள்ள சீக்கியர்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சாரியாஸுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை நீக்கக் கோரி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான்,சீக்கிய அமைப்புகள், குருதுவாராக்கள், ஆம்ஆத்மி எம்பி. ராகவ்சத்தா ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
இதையடுத்து, சரஸ் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் தங்கும் விடுதிகள்,ஓய்விடங்கள் சிறைய தங்குமிடங்கள் வாடகைக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக கடிதத்தையும் தாக்கல் செய்தார்.
கடந்த ஜூலை மாதம் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி காரணமாக, சிரோன்மணி குருதுவாரா பிரபந்தக் குழுவும் ரூ.1000க்குள் அறைவாடகைக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
மத்திய நிதிஅமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, “ மதரீதியான அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், மத அறக்கட்டளைகள் சார்பில் நடத்தப்படும்விடுதிகள், ஹோட்டல்களில் அறை வாடகைக்கு ஜிஎஸ்டி வரி இல்லை” எனத் தெரிவித்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.