தங்கத்தின் விலை நேற்று எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை நேற்று எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,865க்கும், சவரன் ரூ.38,920க்கும் விற்பனை ஆனது. இன்று காலை தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20ரூபாய் குறைந்து, ரூ.4,845க்கும், சவரனுக்கு ரூ.160 சரிந்து ரூ.38,760க்கும் விற்பனையாகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4865ஆக விற்கப்படுகிறது.
இந்த வாரத் தொடக்கத்திலிருந்து தங்கம் விலை ஊசலாட்டத்துடனே இருந்து. வாரத்தொடக்கத்தில் விலை சரிந்தும், அதன்பின் அதிகரித்தது, நேற்று விலையில் எந்தவிதமான மாற்றமில்லாமல் இருந்தது. இந்த வாரத்தில் மட்டும் ஏறக்குறைய கிராமுக்கு 50 ரூபாயும் சவரனுக்கு 400 ரூபாயும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 பைசா குறைந்து, ரூ.63.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.600 சரிந்து, ரூ.63,000க்கும் விற்கப்படுகிறது.