குஜராத்தில் உள்ள சனாந்த் நகரில் உள்ள போர்டு நிறுவனத்தை ரூ.725.70 கோடிக்கு டாடா மோட்டார்ஸின் பேட்டரி கார் பிரிவு விலைக்கு வாங்கியுள்ளது.
குஜராத்தில் உள்ள சனாந்த் நகரில் உள்ள போர்டு நிறுவனத்தை ரூ.725.70 கோடிக்கு டாடா மோட்டார்ஸின் பேட்டரி கார் பிரிவு விலைக்கு வாங்கியுள்ளது.
இந்த நிறுவனத்தின் கட்டிடம், நிலம், வாகன தயாரிப்பு கூடம், எந்திரங்கள், பாகங்கள் அனைத்தையும் டாடா பயணிகள் பேட்டரி கார் பிரிவு விலைக்கு வாங்கியது.
ரூ.18,000 கோடி இழப்பு: இந்தியன் ஆயில், ஹெச்பிசிஎல், பிபிசிஎல் நிறுவனங்கள்: என்ன காரணம்?
இந்தத் தகவலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பைலிங்கில் தெரிவித்துள்ளது. போர்டு நிறுவனமும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, தகுதியான ஊழியர்களை டாடா நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் விலைக்கு வாங்கிய நிறுவனம் மூலம் நேரடியாக 3ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 20ஆயிரம் பேருக்கும் வேலை கிடைக்கும். குஜராத் சனாந்த் போர்டு நிறுவனம் 350 ஏக்கர் பரப்பளவவில் அமைந்துள்ளது. இதில் 110 ஏக்கர் நிலம் எந்திரங்கள் தயாரிக்க மட்டும் பயன்படுகிறது.
இது தொடர்பாக குஜராத் அரசு, டாடா மோட்டார்ஸ், போர்டு நிறுவனம் ஆகியவை கடந்த மே மாதம் அனைத்துவிதமான ஒப்புதல்களும் இந்த நிறுவனம் கைமாறலுக்கு வழங்கியுள்ளன. டாடா நிறுவனம் போர்டு நிறுவனத்தை விலைக்கு வாங்கியதன் மூலம் தன்னுடைய பேட்டரி கார் தயாரிப்பை வேகப்படுத்த முடியும். ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் என்ற அளவிலிருந்து, 4.20 லட்சம் கார்களாக அதிகரிக்கும்.
சுதந்திரத்துக்குப்பின் இந்திய பொருளாதாரத்தின் 10 முக்கிய சாதனைகள்
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவின் மேலாண் இயக்குநர் சைலேஷ் சந்திரா கூறுகையில் “ போர்டு இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் இன்று முடிந்தது. பயணிகள் வாகனப் பிரிவை டாடா குழுமம் மேலும் வலுப்படுத்த இருக்கிறது என்பது அனைத்து பங்குதாரர்களுக்கும், மக்களுக்கும் தெரியும். தொடர்ந்து பேட்டரி கார் பிரிவில் டாடா நிறுவனம் முன்னணியில் இருக்கும்” எனத் தெரிவித்தார்.
டாடா நிறுவனத்துக்கு சொந்தமாக ஏற்கெனவே சானாந்த் பகுதியில் ஒரு பேட்டரி கார் தொழிற்சாலை இருக்கிறது. அங்கிருந்து ஒரு லட்சம் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது போர்டு நிறுவனத்தையும் டாடா குழுமம் வாங்கியதால், பேட்டரி கார் உற்பத்தி மேலும் அதிகரிக்கும்.
மதம்சார்ந்த, தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விடுதிகளுக்கு (sarais) ஜிஎஸ்டி இல்லை: சிபிஐசி அறிவிப்பு
போர்டு நிறுவனத்துக்கு 2030ம் ஆண்டுவரை கட்டணச் சலுகை, ஊக்கத் தொகைகள் குஜராத் அரசால் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது போர்டு நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியதால், போர்டு நிறுவனத்துக்கு 2030ம் ஆண்டுவரை வழங்கப்பட இருக்கும் சலுகைகள் தங்களுக்கும் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. இதற்கு குஜராத் அரசும் சம்மதித்துவிட்டதாகத் தெரிகிறது.