அஞ்சல ஊழியர்கள் கடந்த 2002ம் ஆண்டிலிருந்து 2021 செப்டம்பர் மாதம் வரை ரூ.95.62 கோடி மக்கள் பணத்தை தவறாகப் பயன்படுத்தி, மோசடி செய்துள்ளனர் என்று தலைமை கணக்குத்தணிக்கை அதிகாரி(சிஏஜி) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அஞ்சல ஊழியர்கள் கடந்த 2002ம் ஆண்டிலிருந்து 2021 செப்டம்பர் மாதம் வரை ரூ.95.62 கோடி மக்கள் பணத்தை தவறாகப் பயன்படுத்தி, மோசடி செய்துள்ளனர் என்று தலைமை கணக்குத்தணிக்கை அதிகாரி(சிஏஜி) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சாமானிய மக்கள், நடுத்தர குடும்பத்தினர், முதியோர் ஆகியோருக்கு நம்பிக்கையளிக்கும் இடமாக, பணம் பாதுகாப்பாக வைக்கப்படும் என்ற நம்பிக்கையை தந்த இடம் அஞ்சலகம். ஆனால், அஞ்சலகத்திலும் மக்கள் பணம் மோசடி செய்யப்பட்ட செய்தி, சாமானியர்களின் கடைசி நம்பிக்கையும் போய்விட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
சீனாவுக்கு அடுத்த செக்: ரூ.12 ஆயிரத்துக்கு குறைவாக ஸ்மார்ட்போன் இனி கிடையாது
மோசடி செய்யப்பட்ட பணத்தின் அளவு கடந்த 19 ஆண்டுகளில் மிகக்குறைவுதான் என்றாலும், மக்களின் அசைக்க முடியாதநம்பிக்கையைப் பெற்ற அஞ்சலக்தில் நடந்த மோசடி நம்பிக்கை ஆனிவேரை ஆட்டிப்பார்க்கும் செய்தியாகும்.
கிராமங்கள், நகரங்களில் மக்களிடம் இருந்த சிறிய அளவிலான சேமிப்பு, ரெக்கரிங் டெபாசிட், டைம் டெபாசிட், தேசிய சேமிப்புத் பத்திரங்கள், கிசான் விகாஸ் பத்திரம், பிபிஎப், மாத வருமானத் திட்டம், செல்வமகள் சேமிப்புத் திட்டம், முதியோர் சேமிப்புத் திட்டம் என பல திட்டங்களில் மக்கள் முதலீடு செய்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு வேட்டுவைக்கும் விதமாக இந்த செய்தி அமைந்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை எளிய முறையில் இணைக்கலாம்! இதைப் படியுங்கள்
மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் “ அஞ்சலகத்தின் 5 மண்டலங்களில் ரூ.62.05 கோடிக்கு மோசடி நடந்துள்ளது. போலியாக கணக்கு தொடங்கி அதில் பேலன்ஸ் இருப்பதாகக் கணக்கில் காட்டி, திரும்ப மூடப்பட்டுள்ளது.
புள்ளிவிவரங்களை திருத்தி அமைத்தல், போலிக்கணக்குகளை உருவாக்குதல், டெபாசிட் புத்தகத்தில் போலியாக பதிவு செய்தல், மோசடி செய்து பணம் எடுத்தல் வகையில் ரூ.15.98 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
அஞ்சலக்கத்தின் 8 மண்டலங்களில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு புத்தகத்தில் பணம் வரவுவைக்கப்பட்டும், கணக்கில் ஏற்றப்படவில்லை,அஞ்சலகத்திலும் டெபாசிட் செய்யப்படவில்லை. அந்த வகையில் ரூ.9.16 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
ரூ.18,000 கோடி இழப்பு: இந்தியன் ஆயில், ஹெச்பிசிஎல், பிபிசிஎல் நிறுவனங்கள்: என்ன காரணம்?
அஞ்சலகத்தின் 4 மண்டலங்களில் மோசடி செய்து ரூ.4.08 கோடி வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து போலியான கையெழுத்து போடப்பட்டு, அஞ்சல அதிகாரிகளே பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 4 மண்டலங்களில் வாடிக்கையாளர்களின் கணக்கில் போலியான யூசர் ஐடி, பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டு ரூ.3 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. 2 மண்டலங்களில் அஞ்சல ஊழியர்களே போலியாக கணக்கு திறந்து, ரூ.1.35 கோடி மோசடி செய்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக கடந்த 9 ஆண்டுகளில் அஞ்சலகத்தில் ஊழியர்களால் ரூ.95.62 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.14.39 கோடி மீட்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.81.64 கோடி மீட்கப்படவில்லை.
அஞ்சலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள், கண்காணிப்பில் இருக்கும் அதிகாரிகள் முறையாகக் கணக்குகளை சரிபார்க்காமல் விட்டதே இவ்வளவு பெரிய மோசடிக்கு காரணமாகும்.
இவ்வாறு சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.