தொழிலதிபர் கவுதம் அதானிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, உளவுத்துறை அளித்த தகவலையடுத்து, அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
தொழிலதிபர் கவுதம் அதானிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, உளவுத்துறை அளித்த தகவலையடுத்து, அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
வாட்ஸ் அப்-பில் 4 புதிய வசதி: குரூப்பைவிட்டு சத்தமில்லாமல் வெளியேறலாம்
ஏற்கெனவே தொழிலதிபரும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி, அவரின் குடும்பத்தினருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்புக்கான செலவை ரிலையன்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கவுதம் அதானிக்கு அச்சுறுதல் இருப்பதாக உளவுத்துறை அளித்த அறிக்கையையடுத்து, அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த பாதுகாப்புக்கான செலவுகளை அதானி குழுமமே ஏற்கும். நாட்டில் உள்ள முக்கிய தொழிலதிபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக 30க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை எளிய முறையில் இணைக்கலாம்! இதைப் படியுங்கள்
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் கடந்த 4ம் தேதி வெளியிட்ட முதல் காலாண்டு அறிக்கையில், ரூ.468 கோடி லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.265 கோடிதான் லாபம் ஈட்டியிருந்துத. நிறுவனத்தின் வருவாய் ரூ.41,066 கோடியாக அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டு ரூ.12,578 கோடியாகத்தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.