rent: gst: government:வாடகை வீட்டில் குடியிருப்போர் 18% ஜிஎஸ்டி வரி செலுத்த தேவையில்லை: மத்திய அரசு விளக்கம்

By Pothy Raj  |  First Published Aug 12, 2022, 4:32 PM IST

ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகை வீட்டில் குடியிருப்பவர் மாத வாடகை வழங்கும்போது ஜிஎஸ்டி வரியாக 18 சதவீதம் செலுத்த வேண்டும் என்று என்டிடிவி இணையதளத்தில் வெளியானது தவறானது என்று மத்தியஅரசு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.


ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகை வீட்டில் குடியிருப்பவர் மாத வாடகை வழங்கும்போது ஜிஎஸ்டி வரியாக 18 சதவீதம் செலுத்த வேண்டும் என்று என்டிடிவி இணையதளத்தில் வெளியான செய்தி தவறானது என்று மத்தியஅரசு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி புதிய விதியின்படி, ஜிஎஸ்டியின் கீழ் வாடகைதாரர் பதிவு செய்திருந்தால், அவர் ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிஸம் விதியின் கீழ் 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இந்த 18 சதவீத வரியை வாடகைதாரர் இன்புட் டேக்ஸ் கிரெடிட் மூலம் கழித்துக்கொள்ளலாம். 

Tap to resize

Latest Videos

பேஸ்புக் மவுசு குறையுதா! 7 ஆண்டுகளில் பயன்பாடு 32 சதவீதமாக வீழ்ச்சி: என்ன காரணம்?

இந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரி ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாடகைதாரருக்கு மட்டுமே பொருந்தும், அவர் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வீட்டின் உரிமையாளர் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் சாதாரண வீடு அல்லது பிளாட், சிறிய வீட்டில் மாத வாடகைக்கு வசிப்பவர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்த  வேண்டிய அவசியமில்லை.” எனத் தெரிவித்திருந்தது. 

இந்த செய்தியை மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய அரசின் பிஐபி(PIB) ட்விட்டரில் என்டிடிவியின் செய்தி குறித்து தெரிவித்து, இது தவறான தலைப்பில, குழப்பும் வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்து குறித்து விளக்கம் அளித்துள்ளது. 

வாடகை வீட்டில் குடியிருப்போர் 18% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டுமா? புதிய விதி என்ன சொல்கிறது

 

Claim: 18% GST on house rent for tenants

▶️Renting of residential unit taxable only when it is rented to business entity
▶️No GST when it is rented to private person for personal use
▶️No GST even if proprietor or partner of firm rents residence for personal use pic.twitter.com/3ncVSjkKxP

— PIB Fact Check (@PIBFactCheck)


அதில் “ 
1.    குடியிருப்பு பகுதியை அதாவது வீட்டை வர்த்தக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடும்போதுதான் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். 

2.    வீட்டை அல்லது குடியிருப்புபகுதியை தனிநபர்களுக்கோ அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கோ வாடகைக்கு விட்டிருந்தால் அதற்கு ஜிஎஸ்டி வரி இல்லை.

மிரட்ட வரும் ரிலையன்ஸ் ஜியோ: 1000 நகரங்களில் 5ஜி பணி முடிந்தது: 22 பெருநகரங்களில் அறிமுகம்

3.    நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது பங்குதாரர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக குடியிருப்பை வாடகைக்கு எடுத்தாலும் ஜிஎஸ்டி வரி இல்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

click me!