rbi: rbi bank: கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி: வங்கிக் கடன் வசூலிப்போருக்கு கடிவாளம் போட்ட ரிசர்வ் வங்கி

By Pothy Raj  |  First Published Aug 13, 2022, 9:51 AM IST

வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் கடன் வசூலிப்பு நிறுவனங்களுக்கு பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை ரிசர்வ்வங்கி பிறப்பித்துள்ளது. 


வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் கடன் வசூலிப்பு நிறுவனங்களுக்கு பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை ரிசர்வ்வங்கி பிறப்பித்துள்ளது. 

இதன்படி, கடன் வசூலிப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் அத்துமீறினால், ஏற்க முடியாத செயல்பாடுகளி்ல் ஈடுபட்டால் அதற்கு வங்கிகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் பாய்ந்தது மத்திய அரசு அதிரடி

இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்ட உத்தரவுகள் அனைத்து வங்கிகளுக்கும், வர்த்தக வங்கிகளுக்கும், வங்கி சாராத நிறுவனங்களுக்கும், கூட்டுறவுவங்கிகளுக்கும் , கடன் மீட்பு நிறுவனங்கள், அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ரிசரவ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வங்கிக்கடன் பெற்றுள்ளவர்களிடம் கடன் வசூலிப்பு நிறுவனங்கள், கடன் மீட்பு முகவர், மிகுந்த கண்ணியத்துடன் நடக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் அத்துமீறி நடந்தால், தகாத செயல்களில் ஈடுபட்டால், அதற்கு வங்கிகளே பொறுப்பேற்க வேண்டும். 

வாடகை வீட்டில் குடியிருப்போர் 18% ஜிஎஸ்டி வரி செலுத்த தேவையில்லை: மத்திய அரசு விளக்கம்

கடன் மீட்பு நிறுவனங்கள், முகவர்கள் கடனை வசூலிக்கும் பொருட்டு  வாடிக்கையாளர்களைத் தகாத வார்த்தைகளில் பேசுவதோ அல்லது, திட்டுவதோ, அல்லது உடல்ரீதியான தொந்தரவுகளில் ஈடுபடுவது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 

பொதுவெளியில் வைத்து கடன் வாங்கியவர்களை அவமானப்படுத்துதல், கடன் பெற்றவர்கள் தனிப்பட்ட முறையில் குடும்பத்தாருடன், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடநஅ இருக்கும் அவர்களை கடன் கேட்டு தொந்தரவு செய்தல், அவமானப்படுத்துதல் கூடாது. கடன் வாங்கியவர்களின் செல்போன் எண்ணுக்கு அவதூறான செய்திகளை அனுப்புதல், மிரட்டுதல், அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசுதல், சமூக ஊடகங்களில் அவர்களைப் பற்றி எழுதுதல், வெளியிடுதலும் தடை செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் கடன் கேட்க வேண்டுமானால் காலை 8மணிக்குப் பின்பும், இரவு 7 மணிக்குள்ளாககேட்க வேண்டும். இரவு 7மணிக்கு மேல் வாடிக்கையாளர்களிடம் கடனைக் கேட்டு செல்போனிலோ, தொலைப்பேசியிலோ அல்லது நேரடியாகச் சென்றோ பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாடுகளை, விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

வாடகை வீட்டில் குடியிருப்போர் 18% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டுமா? புதிய விதி என்ன சொல்கிறது

இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 

click me!