ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் FD-க்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் பற்றி இங்கு காணலாம்.
நிலையான வைப்பு தொகை எனப்படும் ஃபிக்ஸட் டெபாசிட் என்பது பண முதலீட்டு திட்டங்களில் ஒரு வகையாகும். இத்திட்டத்தின் கிழ், வங்கி அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் நிதியை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வைப்பு வைக்க வேண்டும். முதிர்வு காலம் வரை அந்த நிதியை வங்கியில் இருந்து எடுக்க முடியாது. முதிர்வு காலம் முடிந்ததும் அந்த தொகைக்கான வட்டி நமக்கு கிடைக்கும். பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களின் பலரது விருப்பமாகவும் எஃப்டி உள்ளது. இந்த ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வங்கிகள் தரும் வட்டி விகிதங்கள் குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 3.55 சதவீதம் முதல் 7.6 சதவீதம் வரையும், மற்றவர்களுக்கு 3 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 3.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரையும், மற்றவர்களுக்கு 3 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வரை வட்டி வழங்குகிறது.
RBL வங்கி
ஆர்பிஎல் வங்கி, பொதுமக்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.80 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு 4 சதவீதம் முதல் 8.30 சதவீதம் வரையும் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு வட்டி வழங்குகிறது.
ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 375 நாட்கள் மற்றும் 444 நாட்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் தொகையை வழங்க அம்ரித் மஹோத்சவ் எஃப்டி என்ற சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியது. அதன் காலக்கெடு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், வாடிக்கையாளர்கள் 375 நாட்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 7.10 சதவீத வட்டி பெறலாம். மூத்த குடிமக்களுக்கு இந்தக் காலகட்டத்தின் நிலையான வைப்புத் தொகைக்கு 7.60 சதவீத வட்டி வழங்கப்படும்.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு தனது வாடிக்கையாளர்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு 4 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையும் வட்டி வழங்குகிறது.
ஆக்சிஸ் வங்கி
மூத்த குடிமக்கள் தவிர அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 3.5 சதவீதம் முதல் 7.1 சதவீதம் வரை இந்த வங்கி வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 3.5 சதவீதம் முதல் 7.85 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
ஹெச்டிஎஃப்சி வங்கி
ஹெச்டிஎஃப்சி வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு 3 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு 3.5 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரையும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
பஞ்சாப் நேஷ்னல் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 4 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
எந்தெந்த நாடுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் தெரியுமா?
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களை 399 நாட்கள் காலவரையறையுடன் ஃபிக்சட் டெபாசிட் செய்ய அனுமதிக்கிறது. இதில், முதலீட்டாளர்களுக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதேசமயம், மூத்த குடிமக்கள் 399 நாட்கள் கொண்ட எஃப்டி திட்டங்களில் 7.50 சதவீதம் வரை வட்டி பெறலாம்.
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடா வங்கி திரங்கா பிளஸ் ஃபிக்ஸட் டெபாசிட் என்ற திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களுக்கு 399 நாட்கள் எஃப்டி மீது 7.90 சதவீத வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களின் நிலையான வைப்புகளுக்கு அதிக வட்டி விகிதங்களின் பலனை வழங்குகிறது.