வீட்டுக்கடனில் பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் செய்யலாமா? அதனால் மொத்த கடன் குறையுமா?

By SG Balan  |  First Published Sep 25, 2023, 3:08 PM IST

புதிதாக மாறும் வங்கியில் அதிகமான சலுகைகள் மற்றும் தளர்வான விதிமுறைகள் இருக்கின்றன என்றால் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்வது பயன் அளிக்கக்கூடும்.


வீடு வாங்க நினைப்பவர்களுக்கு உதவி செய்யும் விதமாக அதிகபட்சமாக 30 ஆண்டுகள் கால வரையறையுடன் வீட்டுக்கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. வீட்டுக்கடன் திட்டங்களில் 8.4 முதல் 10 சதவீதம் வரை வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கியிலும் அளிக்கப்படும் சலுகைகள் அடிப்படையில் வட்டிவிகிதம் மாறுபடுகிறது.

வங்கிக்கடன் வாங்குபவர்களுக்கு, ஒரு வங்கியில் இருந்து வேறொரு வங்கிக்கு வீட்டுக்கடன் திட்டத்தை மாற்றிக்கொள்ளும் பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் வசதி உள்ளது. குறைவான வட்டியில் கடன் கொடுப்பதால் தான் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதியை பயன்படுத்தி, புதிய வங்கிக்கு வீட்டுக்கடனை மாற்றிக்கொள்ளலாம். இதனார், திருப்பிச் செலுத்தவேண்டிய கடன் தொகையும் குறையும்.

Tap to resize

Latest Videos

குறைந்த வட்டி செலுத்துவதன் மூலம் மொத்த தொகையில் கணிசமான அளவு பணத்தைச் சேமிக்க முடியும். இது மட்டுமின்றி, புதிய வங்கி கடனைச் செலுத்துவதற்கான கால வரம்பை நீட்டிக்க சம்மதித்தால், அதன் மூலமும் மாதந்திர தவணைத் தொகை குறையும்.

அதே நேரத்தில், நீண்ட காலமாக தவணைத்தொகை செலுத்துவதால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது சற்று அதிகமான தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். மாதாந்திர தவணை செலுத்துவதில் ஏற்படும் நெருக்கடியைக் குறைக்க இந்த பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி பயன்படும்.

ஒரு வங்கியில் இருந்து, மற்றொரு வங்கிக்கு வீட்டுக்கடன் பாக்கித் தொகையை மாற்றம் செய்யும்போது, சில விஷயங்களை கவனமாகப் பார்த்து முடிவு செய்யவேண்டும். மாறும் வங்கியில் வீட்டுக்கடன் மீதான வட்டிவிகிதம், மாதத்தவணைத் தொகை, இதர கட்டணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் பற்றி தீர்மானிக்கலாம்.

முதலில் கடன் பெற்ற வங்கியை காட்டிலும் புதிதாக மாறும் வங்கியில் அதிகமான சலுகைகள் மற்றும் தளர்வான விதிமுறைகள் இருக்கின்றன என்றால் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்வது பயன் அளிக்கக்கூடும். ஆனால், அப்படி இல்லாத பட்சத்தில் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செய்வது புதிய நெருக்கடிகளையும் உருவாக்க வாய்ப்பு உண்டு.

click me!