பொதுவாக பலரும் இரண்டு, மூன்று வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்து இருப்பார்கள். வர்த்தகத்தில் இருப்பவர்கள் இதற்கு மேலும் கணக்குகளை வைத்து இருப்பார்கள்.
வங்கிக் கணக்குகள் வைத்திருப்பவர்கள் அதற்கு என்று பராமரிப்புக் கட்டணங்களை வங்கிகளுக்கு செலுத்த வேண்டும். ஒருவர் இரண்டு மூன்று வங்கிக் கணக்குகள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், பராமரிப்புக் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும், தேவை இல்லாமல் எதற்கு பராமரிப்புக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் வங்கிக் கணக்குகளை மூட முன் வரலாம். அப்படி முன் வந்தாலும், அதற்கு என்று அபராதக் கட்டணங்களை செலுத்த வேண்டும்.
இதன்படி எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று பார்க்கலாம்:
ஹெச்டிஎப்சி:
இந்த வங்கியில் கணக்கு திறந்த 14 நாட்களுக்குள் மூடினால், எந்தவிதக் கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
ஆனால், வங்கிக் கணக்கு துவங்கிய 15 நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் மூட வேண்டியது இருந்தால், 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதுவே சீனியர் சிட்டிசனாக இருந்தால் ரூ. 300 கட்டணம் செலுத்த வேண்டும்.
சேமிப்புக் கணக்கை 12 மாதங்களுக்குப் பின்னர் மூடினால், கட்டணம் எதுவும் இல்லை. எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் உங்களது வங்கிக் கணக்கை ஹெச்டிஎப்சி வங்கியில் மூடலாம்.
எஸ்பிஐ வங்கி:
உங்களது வங்கிக் கணக்கை எஸ்பிஐ வங்கியில் ஓராண்டுக்குப் பின்னர் மூட வேண்டுமானால், எந்தவிதக் கட்டணங்களும் செலுத்த வேண்டியது இல்லை.
ஆனால், வங்கிக் கணக்கு திறந்த 15 நாட்களுக்குப் பின்னர், ஓராண்டுக்குள் மூடினால், ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஐசிஐசிஐ வங்கி:
வங்கிக் கணக்கு திறந்த 30 நாட்களுக்குள் மூடினால், எந்தவிதக் கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
ஆனால், வங்கிக் கணக்கு திறந்த 30 நாட்களுக்குப் பின்னர், ஓராண்டுக்குள் வங்கிக் கணக்கை மூடினால், ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.
அதுவே, உங்களது கணக்கு சேமிப்புக் கணக்காக இருந்து ஓராண்டுக்குப் பின்னர் மூடினால், எந்தவிதக் கட்டணமும் இல்லை.
தீபாவளி போனஸ்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்ததை விட அதிகம்.. அகவிலைப்படி உயர்வு எவ்வளவு தெரியுமா?
யெஸ் வங்கி:
யெஸ் வங்கியில் கணக்கு திறந்த 30 நாட்களில் இருந்து ஓராண்டுக்குள் மூடினால் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். மேலே உள்ள நாட்களில் இல்லாமல் வேறு கால கட்டங்களில் திறந்து இருந்தால், கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
பஞ்சாப் மற்றும் சிந்து சேமிப்புக் கணக்கு:
இந்த வங்கியில் 14 நாட்களில் இருந்து ஓராண்டு வரை வங்கிக் கணக்கு திறந்து இருந்தால், ரூ. 300, ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். மற்றபடி கட்டணம் இல்லை.