தபால் நிலைய சேமிப்பு திட்டம்.. குறைந்தபட்ச மாத முதலீட்டில் 3 மடங்கு லாபம் தரும் Super Scheme - முழு விவரம்!

By Ansgar R  |  First Published Sep 25, 2023, 4:33 PM IST

ஒரு குழந்தை பிறந்து வளர துவங்கும் பொழுது அவர்களுக்கு பெற்றோர்களாகிய பலரும் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கின்றனர். அது அவர்களுடைய வாழ்நாளின் இறுதி நிமிடம் வரை அவர்களுக்கு உதவியா இருக்கும். அந்த வகையில் அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைக்கு கற்பிக்க வேண்டிய ஒன்றுதான் சேமிப்பு என்ற மிக நல்ல பழக்கம்.


அந்த வகையில் நம் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக நம் கையில் கிடைக்கின்ற சிறு தொகை அரசு நிறுவனங்களில் செலுத்தி சேமிப்பதன் மூலம் நம்மால்  மூன்று மடங்கிற்கும் அதிகமாக லாபம் பெற முடியும், அது குறித்து இந்த பதிவில் முழுமையாக காணலாம். 

நம் வீட்டில் உள்ள பத்து வயதிற்கும் குறைவாக இருக்கின்ற பெண் பிள்ளைகளுக்காக பெற்றோர் பணத்தை சேமிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தை உங்கள் இல்லத்திற்கு அருகில் இருக்கின்ற தபால் நிலையத்தில் உங்களால் தொடங்க முடியும். மாதம் 250 ரூபாய் என்ற குறைந்தபட்ச தொகையில் தொடங்கி மாதத்திற்கு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை உங்களால் இந்த திட்டத்தில் சேமிக்க முடியும். 

Latest Videos

undefined

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வழங்கும் மாநிலம் இதுதான்.. தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

ஆனால் இந்த தொகையை உங்கள் பெண் பிள்ளைக்கு 21 வயது நிரம்பிய பின்னரே எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக அவருக்கு 15 வயது ஆகும் பொழுதும் கூட இதை எடுப்பதற்கான சில வழிமுறைகளும் உள்ளது. 

குறிப்பாக இந்த திட்டத்தில் சேருவதற்கு உங்கள் பெண் குழந்தைகள் 10 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் ஒரு வயது முதலிலேயே நீங்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் சேர முடியும் ஒரு குடும்பத்தில் உள்ள இரு பெண் பிள்ளைகள் வரை இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். சரி இனி இதில் கிடைக்க பெறும் லாபக் கணக்கை குறித்து பார்க்கலாம்.

உங்கள் குழந்தைக்காக ஒரு நாளைக்கு நீங்கள் 200 ரூபாய் சேமிக்க முடியும் என்றால், மாதம் உங்களால் சரியாக 6000 ரூபாய் சேர்த்து வைக்க முடியும். அப்படி நீங்கள் உங்கள் பெண் குழந்தையின் முதல் வயது முதலேயே மாதம் 6000 ரூபாய் செல்வமகள் திட்டத்தில், தபால் நிலையத்தில் செலுத்தி வந்தால், ஒரு வருடத்தில் உங்களால் 72 ஆயிரம் ரூபாயை சேர்க்க முடியும். 

இந்த சேமிப்பு திட்டத்தை, முன்பே கூறியது போல உங்கள் மகளின் 21 வது வயது வரை உங்களால் சேமிக்க முடியும். ஆகவே இந்த 21 ஆண்டுகளில் சரியாக நீங்கள் 10 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை அந்தத் திட்டத்தில் சேர்த்திருப்பீர்கள். இதற்கு 8% வட்டி அளிக்கப்படும் பொழுது, உங்களுக்கு இந்த 21 ஆண்டுகளில் வட்டித்தொகை மட்டுமே சுமார் 21 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 

21 ஆண்டுகள் கழித்து கிடைக்கும் வட்டியுடன் நீங்கள் செலுத்திய அசல் தொகையையும் சேர்த்து உங்கள் பெண் குழந்தை 21 வயது அடையும் பொழுது அவருக்கு நீங்கள் சுமார் 32 லட்சம் ரூபாயை சேமித்து வைத்திருக்க முடியும்.

வீட்டுக்கடனில் பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் செய்யலாமா? அதனால் மொத்த கடன் குறையுமா?

click me!