45 வயதிலேயே மாதம் ரூ.1 லட்சம் வருமானத்துடன் ஓய்வு பெறலாம்.. எப்படி தெரியுமா? சில டிப்ஸ் இதோ..

By Ramya sFirst Published Mar 11, 2024, 3:06 PM IST
Highlights

படித்து முடித்து வேலைக்கு செல்ல தொடங்கும் போதே முதலீடு செய்ய தொடங்கினால் சிறிய தொகையின் மூலம் நீங்கள் நினைத்த ரொக்கத்தை பெற முடியும்

ஒரு நல்ல தொகையுடன் 40 வயது முதல் 50 வயதிற்குள்ளேயே ஓய்வு பெற வேண்டும் என்பதே தற்போது பலரின் விருப்பமாக உள்ளது. ஆனால் இது சாத்தியாமா என்பதே பலரின் கேள்வியாக இருக்கும். முறையாக திட்டமிட்டு முதலீடு செய்யும் பட்சத்தில் நீங்கள் நினைக்கும் வயதில் ஒய்வு பெறலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இதை நிறைவேற்ற சரியான முதலீட்டு உத்தி தேவை. 

குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் பிற திட்டங்கள் வாயிலாக மாதம் ஒரு லட்சம் வரை வருமானத்துடன் ஓய்வு பெறலாம். படித்து முடித்து வேலைக்கு செல்ல தொடங்கும் போதே முதலீடு செய்ய தொடங்கினால் சிறிய தொகையின் மூலம் நீங்கள் நினைத்த ரொக்கத்தை பெற முடியும். உதாரணமாக 23 வயதாகும் ஒருவர் 40 வயதில் ஓய்வு பெற விரும்பினால் அதற்கான தொகையை சேமிக்க அவருக்கு 17 ஆண்டுகள் முதலீட்டு காலம். எனவே 17 ஆண்டுகளில் சிறு தொகை முதலீடு செய்தால் அது பெரிய தொகையாக கிடைக்கும். 

மேலும் முன்னதாகவே ஓய்வு பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலீட்டு உத்திகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அதாவது ஈக்விட்டி முதலீடுகளில் அதிக தொகையை முதலீடு செய்தால் நீங்கள் பணத்தை சேமிக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

ஒருவர் 45 வயதிலேயே ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தால் அவர் 30 முதல் 40 வருடங்களுக்கு முன்பே வாழ்வதற்கான தொகையை வைத்திருக்க வேண்டும். அவர்கள் 45 வயதுக்கு மேல் சம்பாதிக்க மாட்டார்கள் என்பதால், பணவீக்கத்தை முறையாக கணக்கிட்டு சேமிப்பை திட்டமிட வேண்டியது மிக மிக முக்கியம். எதிர்பாராத மருத்துவ செலவுகள் உங்கள் திட்டமிடலை பாதிக்கலாம் என்பதால் மருத்துவ காப்பீடு செய்து கொள்வது நல்லது. 

மேலும் ஒருவர் 40 வயதிலேயே ஓய்வு பெற விரும்புகிறார். தனது 41வது வயதில் இருந்து முதலீடுகள் வழியே 1 லட்சம் வருமானம் பெற விரும்பினார் எனில் அவரிடம் ரூ.4 கோடி மதிப்பிலான போர்ட்ஃபோலியோவை வைத்திருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த 4 கோடி ரூபாயில் 60% முதலீடு, பங்குச்சந்தை சார்ந்த ஈக்விட்டி முதலீடுகளாக இருக்க வேண்டும் என்றும் 20% கடன் பத்திரங்கள், 10% நகை, 10% ரியல் எஸ்டேட் என பிரித்துக்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த முறையில் போர்ட்ஃபோலியோவை பிரித்துக்கொள்ளும் போது அது நீண்ட காலத்திற்கு வளர்க்கூடியதாகவும், ஓய்வு கால பணவீக்கத்திற்கு ஏற்ப வருமான தரக்கூடியதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 

click me!