இங்கிலாந்தை சேர்ந்த The Body Shop என்ற அழகுசாதனப் பொருட்கள் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள தனது கடைகளை மூடியுள்ளது
இங்கிலாந்தை சேர்ந்த The Body Shop என்ற அழகுசாதனப் பொருட்கள் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள தனது கடைகளை மூடியுள்ளது. இதே போல் விரைவில் கனடாவில் பல கடைகளையும் மூட திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் அந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், தி பாடி ஷாப், நிறுவனத்தின் அமெரிக்க துணை நிறுவனம் மார்ச் 1 முதல் செயல்படாது என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
கனடாவில் உள்ள தனது105 கடைகளில் 33 கடைகள் உடனடியாக கலைப்பு விற்பனையைத் தொடங்கும் என்றும், "கனடாவின் இ-காமர்ஸ் ஸ்டோர் வழியாக ஆன்லைன் விற்பனை நிறுத்தப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கனடாவில் உள்ள அனைத்து கடைகளும் தற்போதைக்கு திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் அதிக பணவீக்கம் பாரம்பரிய சில்லறை விற்பனையாளர்களை பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, குறிப்பாக தி பாடி ஷாப் போன்ற நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மனித உரிமைகள் ஆர்வலர் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சாரகர் அனிதா ரோடிக் என்பவரால் 1976 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், நிலையான, நெறிமுறை மற்றும் பாதிப்பு இல்லாத தயாரிப்புகளுக்கு இந்த நிறுவனம் பெயர் பெற்றது. 2023 ஆம் ஆண்டளவில், 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,500 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுக்கு விரிவடைந்தது மற்றும் 60 க்கும் மேற்பட்ட சந்தைகளில் ஆன்லைனில் இந்நிறுவனத்தின் பொருட்கள் கிடைத்தன.
எனினும் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்தே, தி பாடி ஷாப் பல முறை கை மாறியுள்ளது. இது 2006 ஆம் ஆண்டில் அழகுசாதன நிறுவனமான L'Oreal நிறுவனத்தால் ஒரு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வாங்கப்பட்டது, பின்னர் 2017 ஆம் ஆண்டில் பிரேசிலிய நிறுவனமான நேச்சுராவிற்கு மற்றொரு பில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது. எனினும்
இருப்பினும், தி பாடி ஷாப் நிறுவனம் கடும் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியது 2022 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு ஆண்டு 13.5 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது.மேலும், கடந்த ஆண்டின் பிற்பகுதியில்தி பாடி ஷாப் சுமார் 266 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொத்து மேலாண்மை குழுவான ஆரேலியஸுக்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.