பொன்மகள் சேமிப்பு திட்டம் போலவே ஆண் குழந்தைகளுக்கு என்று செயல்படக்கூடிய திட்டம் பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் ஆகும்.
பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை ஆண் குழந்தையின் பெயரில் சேமிக்கலாம். குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை சேமிக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு 8.1 சதவீத வட்டி லாபம் கிடைக்கிறது. ஆண் குழந்தைகள் இத்திட்டத்தில் இணைய வயது வரம்பு கிடையாது. அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் கணக்கு திறக்கலாம்.
இந்திய அஞ்சல் துறை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம். ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். வட்டி 8.1 சதவீதம் என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் வட்டி விகிதம் மாறும் என்று கூறப்படுகிறது.
எனவே நடைமுறையில் உள்ள வட்டி விகிதம் குறித்து தபால் நிலையத்தில் அல்லது இந்தியா போஸ்ட் வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம். இந்தத் திட்டத்தில் இணைய வயது வரம்பு கிடையாது என்கிறார்கள். அடுத்ததாக நாம் பார்க்க போவது, பப்ளிக் ப்ராவிடன்ட் பண்ட் (பிபிஎப்) கணக்கு. இந்த பிபிஎஃப் கணக்கின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு.
குழந்தையின் வயது 10 வயதிற்கு மேல் இருந்தால் அந்தக் குழந்தையின் பெயரிலேயே சேமிப்பு கணக்கை தொடங்கலாம். 10 வயதிற்கு குறைவாக இருந்தால் இணைப்பு கணக்கு (joint account) தொடங்க வேண்டும். அதாவது பெற்றோர் பெயரிலும் குழந்தை பெயரிலும் சேர்த்து கணக்கு தொடங்க வேண்டும். குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் முகவரி, ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும்.
கணக்கு தொடங்கியதில் இருந்து 5 ஆவது ஆண்டில் இருந்து 50% தொகையை பெற்றுக்கொள்ளலாம். இதை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டுகள் முடிந்த உடன் கணக்கை முடித்துக் கொள்ளலாம். அத்தோடு கணக்கு தொடங்கி 3 ஆண்டுகளில் வங்கி கடனைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?