அமெரிக்கா கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கத்தை சந்தித்து வருகிறது. ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் பணவீக்கம் 9.1சதவீதமாக உயர்ந்து, அதிபர் ஜோ பிடன் அரசுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
அமெரிக்கா கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கத்தை சந்தித்து வருகிறது. ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் பணவீக்கம் 9.1சதவீதமாக உயர்ந்து, அதிபர் ஜோ பிடன் அரசுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்த அளவைவிட அதிகரித்து இருப்பதால், அதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துவது உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே 75 புள்ளிகள் வட்டியை உயர்த்திவிட்ட நிலையில் அடுத்தாக 100 புள்ளிகள் வரை உயரும் என்று சந்தை வல்லுநர்கள் கணிக்கிறார்கள்
ரூ.1000 கோடிக்கு மருத்துவர்களுக்கு இலவசங்கள்: ஐடி ரெய்டில் டோலோ 650 தயாரிப்பு நிறுவன மோசடி அம்பலம்
அமெரிக்க டாலர் அடிப்படையில்தான் சர்வதேச வர்த்தகம் நடந்து வரும் நிலையில், வட்டிவீதம் அதிகரித்து, டாலர் மதிப்பு உயரும் போது, அனைத்து நாடுகளின் கரன்ஸிகளும் நெருக்கடிக்குள்ளாகும். ஐரோப்பிய, ஆசியப் பங்குச்சந்தையில் பெரும் ஏற்ற, இறக்கம், பதற்றமான சூழல் உருவாகும்.
1800 ஊழியர்களை நீக்கிய மைக்ரோசாஃப்ட்: கூகுளையும் விட்டுவைக்காத பணவீக்கம்
அமெரிக்காவில் கடந்த 1981ம் ஆண்டுக்குப்பின் இப்போதுதான் நுகர்விலைக் குறியீடு 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. அனைத்து பொருளாதார வல்லுநர்களும் கணித்தஅளவைவிட 1.5 % அதிகரி்த்துள்ளது. இந்த பணவீக்கம் என்பது, அமெரிக்காவில் உணவு, பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை, வீட்டுவாடகை அனைத்தும் உயர்ந்துவிட்டதைக் குறிக்கிறது.
மே மாதத்தில்இருந்த பணவீக்கத்தைவிட 1.1% அதிகமாகவும், கடந்த ஆண்டை விட 8.8% அதிகமாகவும் பணவீக்கம் உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தைவிட உணவுப்பொருட்கள் விலை 0.7 சதவீதமும், எரிபொருட்கள் விலை 5.9% அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கம் நிச்சயம் அதிபர் ஜோ பிடன் தலைமையிலான அரசுக்கு பெரும் தலைவலியைக் கொடுக்கும். இதனால் இந்த மாத இறுதியில் நடக்கும் அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கொள்ளைக் கூட்டத்தில் வட்டி வீதத்தை கடுமையாக உயர்த்தப்படும் என்று நம்பலாம்.
தலைமைப் பொருளாதார ஜோதிடரை நியமியுங்கள்: நிர்மலாவை வம்பிழுத்த ப.சிதம்பரம்
மே மாதத்தைவிட ஜூன் மாதத்தில் கேஸ் விலை 11.2 சதவீதம் உயர்ந்துள்ளது, மின்சாரம், இயற்கை எரிவாயு விலை 3.5சதவீதமும் அதிகரித்து, கடந்த 2006ம் ஆண்டைவிட உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை ஜூன் மாதத்தில் ஒரு சதவீதமும்,கடந்த ஆண்டைவிட 10.4சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு கடந்த 1981ம் ஆண்டுக்குப்பின் ஏற்பட்டுள்ளது.
அடுத்து என்ன நடக்கும்
அமெரிக்க பெடரல் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீதத்தை உயர்த்தும்பட்சத்தில் அனைத்து நாடுகளிலும் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள அந்நிய முதலீட்டாளர்கள் டாலரின் முதலீடு செய்யஆர்வம் காட்டுவார்கள். இதனால் டாலர் மதிப்பு அனைத்து கரன்ஸிகளுக்கு எதிராக மேலும் வலுப்பெறும்.
குறிப்பாக இந்தியாவில் பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது அதிகரிக்கும், டாலர் முதலீடு வெளியேறும். இதனால் பங்குச்சந்தை வரும் நாட்களில் பெரும் சரிவை சந்திக்க நேரிடும், சில்லரை முதலீட்டாளர்கள் பெரும் நெருக்கடியைச் சந்திப்பார்கள்.