சென்னை சுரானா குழுமம் ரூ.4ஆயிரம் கோடி வங்கி மோசடி: இயக்குநர்கள் உள்பட 4 பேர் சிறையில் அடைப்பு

By Pothy Raj  |  First Published Jul 14, 2022, 3:30 PM IST

சென்னையைச் சேர்ந்த சுரனா குழுமம் வங்கியில் ரூ.3,986கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல், சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதையடுத்து, இயக்குநர்கள் இருவர் உள்ளி்ட்ட 4 பேரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்தனர்.


சென்னையைச் சேர்ந்த சுரனா குழுமம் வங்கியில் ரூ.3,986கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல், சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதையடுத்து, இயக்குநர்கள் இருவர் உள்ளி்ட்ட 4 பேரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்தனர்.

சென்னையைச் சேர்ந்த சுரானா குழுமம் தங்க நகை தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜய் ராஜ் சுரானா. இவர்களுக்கு சுரானா இன்டஸ்ட்ரீஸ்லிமிட்டட், சுரானா பவர் லிமிட், சுரானா கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களும் உள்ளன. இதற்கும் இருவரும் இயக்குநர்களாக இருந்து வருகிறார்கள். இது தவிர சுரானா குழுமத்தின் சார்பில் போலியாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு பி.ஆனந்த், பிரகாரன் இருவரும் இயக்குநர்களாக இருந்தனர்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் ஐடிபிஐ வங்கியில் ரூ.3,986கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டது.இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

undefined

இதற்கிடையே, வங்கியில் இருந்து கடனாகப் பெற்ற பணத்தை சட்டவிரோதமாக போலியாக உருவாக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு மாற்றியது தெரியவந்தது. மேலும் சிங்கப்பூர், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், கேமேன் தீவுகளிலும் போலியாக நிறுவனங்களைத் தொடங்கி கடன் தொகையை பரிமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்குப்பதிவு செய்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், போலியாக நிறுவனங்களைத் தொடங்கி அதில் பணப்பரிமாற்றம் செய்தது, அந்த போலி நிறுவனங்களுக்கு இயக்குநராக தினேஷ் சந்த் சுரானாவும், பரிமாற்றத்தில் விஜய் ராஜ் சுரானாவும் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, கடந்த 12ம்தேதி தினேஷ் சந்த் சுரானா, விஜய் ராஜ் சுரானா, ஆனந்த், பிரபாகரன் ஆகிய 4 பேரையும்அமலாக்கப்பிரிவினர் விசாரணைக்கு அழைத்து விசாரித்தனர். இதில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதையடுத்து, 4 பேரையும் அமலாக்கப்பிரிவினர் கைது செய்தனர். 

இவர்கள் 4 பேரையும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன் நேற்றுஆஜர்படுத்தினர். இவர்கள் 4 பேரையும், வரும் 27ம் தேதிவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

click me!