
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு, பெட்ரோல் மீது வாட் வரி லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைத்து இன்று அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியிலிருந்து இறங்கியபின், பாஜக ஆட்சி அமைத்துள்ளது. அங்கு முதல்வராக ஏக்நாத் ஷிண்டே உள்ளார்.துணை முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் உள்ளார்.
இ்ந்நிலையில் முதல்வர் ஏக்நாத்ஷிண்டே தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இ்ந்தக் கூட்டத்தின் முடிவில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி பெட்ரோல் மீதான வாட் வரி லிட்டருக்கு ரூ.5, டீசல் மீதான வாட் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்க முடிவு எடுக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சி பதவி ஏற்றதும் துணை முதல்வரான தேவேந்திரபட்நாவிஸ், பேசுகையில் “ பாஜக ஆளும் பிறமாநிலங்களைப் போல், மகாராஷ்டிராவிலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி விரைவில் குறைக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சி பதவி ஏற்றதும் துணை முதல்வரான தேவேந்திரபட்நாவிஸ், பேசுகையில் “ பாஜக ஆளும் பிறமாநிலங்களைப் போல், மகாராஷ்டிராவிலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி விரைவில் குறைக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில் “ மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை கடந்த நவம்பர் 4 மற்றும் மே 22ம் தேதி குறைத்து. மாநிலங்களும் இதேபோன்று வரியைக் குறைக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஆனால், மத்திய அரசு விடுத்த கோரிக்கையை இதற்கு முன் ஆண்ட மகாவிகாஸ் அகாதி அரசு காதில் போட்டுக்கொள்ளவில்லை.
மாநிலத்தின் நிதிநிலையை ஆய்வு செய்தபின்புதான், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்துள்ளோம். இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.3 குறையும். இதனால் மாநில அரசுக்கு கூடுதலாக ரூ.6ஆயிரம் கோடி நிதிச்சுமை ஏற்படும்.
பிரதமர் மோடி என்னை இன்று காலை தொலைப்பேசியில் அழைத்தார். கோவிட் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து கேட்டறிந்தார். பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தினால், மாநிலத்தில் கொரோனா பாஸிட்டிவ் வீதம் குறையும்.
தூய்மை இந்தியா திட்டத்தின் 2-வது பகுதி விரைவி்ல மகாராஷ்டிராவில் நடைமுறைப்படுத்தப்படும். மாநிலத்துக்கு குடிநீர் வழங்கும் ஆதாரங்கள் அனைத்தும் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு ஷிண்டே தெரிவித்தார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.