பட்ஜெட் 2024 : வருமான வரி முதல் சுற்றுலா வரை.. இடைக்காலபட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

By Ramya s  |  First Published Feb 1, 2024, 2:18 PM IST

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலுக்கு முந்தைய கடைசி பட்ஜெட் என்பதால், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 6-வது பட்ஜெட் இதுவாகும். அதே போல் மோடி 2.0 அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட்டும் இதுதான். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு பதவியேற்றவுடன், அடுத்த ‘முழு பட்ஜெட்’ ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும். இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மத்திய பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள் : 

Tap to resize

Latest Videos

தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதுகுறித்து பேசிய அவர் “ வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 2.4 மடங்கு அதிகரித்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். 2014ல் இருந்து நேரடி வரி வசூல் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.2024-25ல், வரி வரவுகள் ரூ. 26.02 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி வீடுகளை நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.  2025-ம் நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் திருப்புமுனையாக இருக்கும்: நிர்மலா சீதாராமன்

பயணிகளின் பாதுகாப்பு, வசதி மற்றும் வசதியை மேம்படுத்த 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ஆக மாற்றப்படும் என்று மத்திய நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்தார். மெட்ரோ ரயில் மற்றும் நமோ பாரத் உள்ளிட்ட முக்கிய ரயில் உள்கட்டமைப்பு திட்டங்கள் மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டத்தையும் இத்தாராமன் அறிவித்தார். "இந்த நோக்கத்திற்காக ஒரு குழு அமைக்கப்படும்.என்று தெரிவித்தார். 

"முத்தலாக் முறையை நீக்குதல், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 1/3 இட ஒதுக்கீடு மற்றும் 70 சதவீதத்திற்கு மேல் வழங்குதல். பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் பெண்களுக்கான வீடுகள் அதிகரித்துள்ளன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேலும் “ சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். சூரிய மேற்கூரை ஒளிமயமாக்கல் மூலம் ஒரு கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். சோலார் மின் உற்பத்தியால் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.18,000 மிச்சமாகும்” என்று தெரிவித்தார்.

சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மாநிலங்களுக்கு நீண்ட கால வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும். மேலும் “ கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் நேர்மறையான மாற்றத்தைக் கண்டுள்ளது. "ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் - அவர்களின் தேவைகள், அவர்களின் அபிலாஷைகள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டும்."

2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவவதற்கு அரசாங்கம் உழைத்து வருகிறது.  "அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சமமாக கவனம் செலுத்துகிறது - நிர்வாகம், மேம்பாடு மற்றும் செயல்திறன் ஆகியவை எங்கள் குறிகோள் என்று தெரிவித்தார்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதை எங்கள் அரசு ஊக்குவிக்கும் என்று நிதியமைச்சர் கூறினார்.

தாய் மற்றும் குழந்தை பராமரிப்புக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதில் ஒருங்கிணைந்த ஒரு விரிவான திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். "சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0" இன் கீழ் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்துவது மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து விநியோகம், குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக துரிதப்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

மேலும் பேசிய நிர்மலா சீதாராமன் “ பால் பண்ணையாளர்ளுக்கு உதவும் வகையில் ஒரு விரிவான திட்டம் வகுக்கப்படும். கால் மற்றும் வாய் நோயைக் கட்டுப்படுத்த ஏற்கனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது, ஆனால் பால்-விலங்குகளின் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது. தற்போதுள்ள திட்டங்களான ராஷ்டிரிய கோகுல் மிஷன், தேசிய கால்நடை இயக்கம் மற்றும் பால் பதப்படுத்துதல் மற்றும் கால்நடை வளர்ப்புக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் வெற்றியின் அடிப்படையில் இந்த திட்டம் கட்டமைக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

9 கோடி பெண்களைக் கொண்ட 83 லட்சம் சுய உதவிக் குழுக்கள் கிராமப்புற சமூக-பொருளாதார நிலப்பரப்பை மாற்றி வருகிறது.. இதன் மூலம் ஏற்கனவே 2 கோடி பெண்கள் லட்சாதிபதியாக உதவியுள்ளது. இந்த இலக்கை 3 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்..

பெண் தொழில்முனைவோருக்கு 30 கோடி முத்ரா யோஜனா கடன் வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை 10 ஆண்டுகளில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.

சார்ஜிங் உள்கட்டமைப்பை ஆதரிப்பதற்காக எலக்ட்ரிக் வாகன சுற்றுச்சூழல் அமைப்பை விரிவுபடுத்த பொது போக்குவரத்து வலையமைப்பிற்கான இ-பஸ்கள் ஊக்குவிக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்

தொழில்நுட்ப ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான பொற்காலம், 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 149 ஆக இரு மடங்காக அதிகரித்துள்ளது. பிரதமர் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை : பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..

வேகமான மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை மாற்றங்களால் எழும் சவால்களை விரிவான பரிசீலனைக்கு அரசாங்கம் ஒரு உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைக்கும்; இந்த சவால்களை முழுமையாக எதிர்கொள்ள குழு பரிந்துரைகளை வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்..

பால் பண்ணையாளர்களை ஆதரிப்பதற்கான ஒரு விரிவான திட்டம் வகுக்கப்படும்; உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது, ஆனால் பால் கறக்கும் விலங்குகளின் உற்பத்தித்திறன் குறைவாக இருப்பதால், தற்போதுள்ள திட்டங்களில் இந்த திட்டம் கட்டமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சகங்களுக்கான ஒதுக்கீடு: பாதுகாப்புக்கு 6.2 லட்சம் கோடியும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துக்கு 2.78 லட்சம் கோடியும்

click me!