மத்திய அரசின் திட்டங்களால் 2 கோடி பெண்கள் லட்சாதிபதிகள் ஆகியுள்ளனர் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அதன் மீது உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் சமமான வளர்ச்சி என்பதை மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம் என்றார். மேலும், ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய 4 தரப்பினருக்கு முக்கியத்துவம் அளித்து பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பெண்களுக்கான சட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவித்த நிர்மலாஅ சீதாராமன், பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் தடைச் சட்டம், கிராமப்புறங்களில் 70 சதவீத வீடுகள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பெண்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். இந்த திட்டங்களுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Union Budget 2024 live updates
மத்திய அரசின் திட்டங்களால் 2 கோடி பெண்கள் லட்சாதிபதிகள் ஆகியுள்ளதாகவும், இதனை 3 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் பட்ஜெட் உரையின் போது நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “10 ஆண்டுகளில் உயர் கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 28 சதவீதமாக உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளில் 30 கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது. முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.” என்றார். நாட்டில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளதாகவும், மக்களின் சராசரி வருவாய் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மீண்டும் பாஜக ஆட்சி: பட்ஜெட் உரையில் நிர்மலா நம்பிக்கை!
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் எனவும், நடுத்தர குடும்பத்தினர் வீடு வாங்க, கட்ட புதிய திட்டம் கொண்டு வரப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.