40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு உயர்த்தப்படும்: பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன்

By SG BalanFirst Published Feb 1, 2024, 11:59 AM IST
Highlights

40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு தரம் உயர்த்தப்படும். விமான நிலையங்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்த்தப்படும். இந்திய விமான நிறுவனங்கள் 1,000 புதிய விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளன என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில், மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 4 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

"கோவிட் கால கட்டத்தில் சவால்கள் இருந்தபோதும், பிரதமர் ஆவாஸ் யோஜனா கிராமப்புற திட்டத்தை செயல்படுத்துவது தொடர்ந்தது. மேலும் 3 கோடி வீடுகள் என்ற இலக்கை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது. குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேவையை பூர்த்தி செய்ய அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் காட்டப்படும்" என அவர் குறிப்பிட்டார்.

40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு தரம் உயர்த்தப்படும். விமான நிலையங்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்த்தப்படும். இந்திய விமான நிறுவனங்கள் 1,000 புதிய விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளன என்றும் அவர் கூறினார்.

விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம்: பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்

ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும். ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க 1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும். 5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்கா அமைக்கப்படும் எனவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

"பிரதம மந்திரி முத்ரா யோஜனா 43 கோடி கடன்களை வழங்கியுள்ளது. தொழில் முனைவோருக்காக 22.5 லட்சம் கோடி  கடன் அளிக்கப்பட்டுள்ளது. ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ், ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் ஸ்டார்ட்அப் கிரெடிட் கேரண்டி திட்டங்கள் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு உதவுகின்றன" எனவும் கூறியுள்ளார்.

"வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கவும், திறன்களை மேம்படுத்தவும், முதலீடுகளுக்கான வளங்களை ஏற்படுத்தவும் உதவும் பொருளாதாரக் கொள்கைகளை எங்கள் அரசு பின்பற்றும்" எனவும் உறுதி அளித்துள்ளார்.

ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்.. இடைக்கால பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..

click me!