விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம்: பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்

Published : Feb 01, 2024, 11:31 AM ISTUpdated : Feb 01, 2024, 12:49 PM IST
விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம்: பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்

சுருக்கம்

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மத்திய அரசு செயல்பட்டு வருவதாகக் கூறிய நிர்மலா சீதாராமன், "நமது நாடு உயர்ந்த அபிலாஷைகளையும், பெருமையையும், பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் கொண்டுள்ளது" என்றும் குறிப்பிட்டார்.

விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய நான்கு பிரிவினருக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசி வருகிறார். உரையை சரியாக 11 மணிக்குத் தொடங்கிய அவர், 2014ம் மோடி பிரதமராக பதவியேற்கும் போது பொருளாதாரத்தில் இந்தியா பின்தங்கியிருந்தது என்றும் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவை 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க உழைத்து வருகிறோம். அரசியலுக்காகப் பயன்படுத்தப்பட்ட  சமூக நீதி என்பதை திட்டங்களுக்கான தாரக மந்திரமாக பயன்படுத்துகிறோம். வளர்ச்சியின் பலன்கள் மக்களைச் சென்றடையத் தொடங்கியுள்ளது. எங்கள் பணிகளுக்காக மக்கள் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Union Budget 2024-25 LIVE Updates in Tamil : இடைக்கால பட்ஜெட் 2024-25 தாக்கலானது

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மத்திய அரசு செயல்பட்டு வருவதாகக் கூறிய நிர்மலா சீதாராமன், "நமது நாடு உயர்ந்த அபிலாஷைகளையும், பெருமையையும், பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் கொண்டுள்ளது" என்றும் குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் பல பரிமாண வறுமையிலிருந்து விடுதலை பெற்றுள்ளனர் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 54 லட்சம் இளைஞர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்றுள்ளனர். 3000 புதிய ஐடிஐகளை நிறுவப்பட்டுள்ளன. 7 ஐஐடி, 16 ஐஐஐடி, 7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் எடுத்துரைத்தார்.

Union Budget 2024 மீண்டும் பாஜக ஆட்சி: பட்ஜெட் உரையில் நிர்மலா நம்பிக்கை!

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

SBI to Hire: ஸ்டேட் பேங்கில் செம்ம வேலை வாய்ப்பு... ஒவ்வொரு காலாண்டுக்கும் 16000 பேருக்கு வேலை..! 300 புதிய கிளை திறக்கப்படும்.!
AI City Rising: பாலைவனத்தில் உருவாகும் பிரமாண்ட "ஏஐ" தொழில் நகரம்.! அரபு நாடுகளில் உருவாகிறதா "போட்டி" சிலிகன் வேலி?!