சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர் “ 2014-ல் பிரதமர் மோடி பதவியேற்ற போது இந்திய பொருளாதாரம் பின் தங்கிய நிலையில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது. பல்வேறு சவால்களை எதிர்க்கொண்டு இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளது.
80 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டதால் பசி, பட்டினி நீக்கப்பட்டது. நாட்டில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கிசான் திட்டத்தின் மூலம் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக நிதியுதவி வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம்: பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்
மேலும் " மத்திய அரசு 3000 புதிய ஐடிஐகளை நிறுவியுள்ளது. 7 ஐஐடிகள், 16 ஐஐஐடிகள், 7 ஐஐஎம்-கள், 15 எய்ம்ஸ் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் என பல நிறுவன உயர்கல்விகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 1.4 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. 10 ஆண்டுகளில் 30 கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது.
முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள 70% வீடுகள் ஒற்றை அல்லது கூட்டு உரிமையாளர்களாக பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
Union Budget 2024 மீண்டும் பாஜக ஆட்சி: பட்ஜெட் உரையில் நிர்மலா நம்பிக்கை!
சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். சூரிய மேற்கூரை ஒளிமயமாக்கல் மூலம் ஒரு கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். சோலார் மின் உற்பத்தியால் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.18 கோடி மிச்சமாகும்” என்று தெரிவித்தார்.