Toyota Hilux : அதிநவீன அம்சங்கள், அசத்தல் தோற்றம் - இந்தியாவில் டொயோட்டா ஹிலக்ஸ் அறிமுகம்

By Nandhini SubramanianFirst Published Jan 20, 2022, 12:42 PM IST
Highlights

டொயோட்டா ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை அறிமுகம் செய்தது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை அறிமுகம் செய்தது. இந்தியாவில் ஜப்பான் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரின் முதல் பிக்கப் டிரக் மாடல் இது ஆகும். இந்திய சந்தையில் புதிய ஹிலக்ஸ் பிக்கப் டிரக், இசுசு வி கிராஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

புதிய டொயோட்டா ஹிலக்ஸ் மாடலில் மஸ்குலர் பம்ப்பர்கள்,ஹெக்சகோனல் வடிவம் கொண்ட கிரில், சில்வர் ஸ்கிட் பிளேட், LED ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட LED டே-டைம் ரன்னிங் லைட்கள், மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் செங்குத்தான டெயில்கேட்கள் உள்ளன.

தோற்றம் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் ஹிலக்ஸ் கேபின் அசத்தலான பட்டியலை கொண்டுள்ளது. இதன் கேபின் டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலின் கேபினை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, லெதர் இருக்கைகள், டூயல்-சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் கொண்டிருக்கிறது. 

இந்த பிக்கப்-டிரக் மாடலில் உள்ள என்ஜின் 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் பல்வேறு டிரைவிங் மோட்கள் உள்ளன. இதில் டிராக்‌ஷன் கண்ட்ரோல்,4x4 டிரைவ்-டிரெயின், எலெக்டிரானிக் டிஃபரென்ஷனியல் லாக் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

சர்வதேச சந்தையில் 1968 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹிலக்ஸ் மாடல் இதுவரை 20 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த மாடல் உலகம் முழுக்க 180 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த மாடலுக்கான முன்பதிவு இந்திய சந்தையில் துவங்கியுள்ள நிலையில், வெளியீடு மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது.

click me!