RIL: mukesh ambani: தீபாவளிக்குள் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை: முகேஷ் அம்பானி அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்

By Pothy RajFirst Published Aug 29, 2022, 2:50 PM IST
Highlights

தீபாவளிப் பண்டிகைக்குள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை தொடங்கப்படும். இதற்காக ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

தீபாவளிப் பண்டிகைக்குள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை தொடங்கப்படும். இதற்காக ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின்(RIL) 45-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று காணொலி வாயிலாக தொடங்கியது. முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் மத்தியில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உரையாற்றி வருகிறார். அவருடைய அறிவிப்பின் முக்கிய அம்சங்களைக் காணலாம்.

ன்எஸ்இ ஊழல்: சித்ராவுக்கு சோதனைக் காலம் ! ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்

1.    இந்தியாவின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளது. சுதந்திரத்துக்குப்பின் அனைத்துஇந்தியர்களும் சேர்ந்த இதுவரை அடைந்ததைவிட அடுத்த தலைமுறையினருக்கு அதிகமாகக் கிடைக்கும்.

2.    உலகளவில் பெரும் பொருளாதார சிக்கல், மந்தநிலை, அழுத்தம் இருந்தபோதும் இந்தியப் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

3.    ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி 75% அதிகரித்து ரூ.25 ஆயிரம் கோடியைக் கடந்துள்ளது. இந்த ஆண்டில் நாட்டின் ஏற்றுமதியில் 8.4% ஏற்றுமதியில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்கு வகித்துள்ளது. கடந்த ஆண்டு 6.8% ஏற்றுமதியாகத்தான் இருந்தது.

என்னங்க புதுசா இருக்கு! ரயில் டிக்கெட் கேன்சல் செய்தாலும் ஜிஎஸ்டி வரி

4.    ரிலையன்ஸ் நிறுவனம் நாடுமுழுவதும் 2.32 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
5.    நாட்டிலேயே அதிகமாக வரிசெலுத்தும் நிறுவனமாக ரிலையன்ஸ் இருக்கிறது. ரூ.1.88 லட்சம் கோடி வரியாக அரசுக்கு செலுத்துகிறோம்.

6.    அனைவருக்கும் கிடைக்கும் வகையில், எளிதாக வாங்கும் வகையில், அதிவேகமுள்ள 5ஜி சேவை விரைவில் தொடங்கப்படும். 

7.    வரும் தீபாவளிப்பண்டிகைக்குள் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும்சென்னை உள்ளிட்ட நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும். 

பெரும்சரிவில் தங்கம் விலை: என்ன காரணம்? சவரனுக்கு ரூ.280 வீழச்சி: இன்றைய நிலவரம் என்ன?

8.    அதன்பின் 5ஜி சேவை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். அடுத்த 18 மாதங்களுக்குள் நாட்டின் ஒவ்வொரு தாலுகா, நகரங்களில் ரிலையன்ஸ் 5ஜி சேவை வந்துவிடும் இதற்காக ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

9.    இந்தியச் சந்தையில் அனைத்து மக்களும் வாங்கும் வகையில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து அல்ட்ரா மொபைல் போன்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

10.    மேட் இன் இந்தியா 5ஜி கூட்டுறவில் மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட், எரிக்ஸன், பேஸ்புக் ஆகிய நிறுவனத்துடன் ரிலையன்ஸ் இணைந்து பணியாற்றியது. அடுத்ததாக குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இருக்கிறது.

11.    4ஜி நெட்வொர்க்கில் ரிலையன்ஸ்நிறுவனம் 421 மில்லியன் மொபைல் பிராண்ட்பேண்ட் சந்தாதாரர்கள் வைத்து நம்பர் ஒன் இடத்தில் உள்ளோம். 

12.    நாட்டில் 10 கோடி வீடுகளுக்கு அதிவேக இன்டர்நெட் பிராண்ட்பேண்ட் சேவையை வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

13.    2023ஆண்டு டிசம்பருக்குள் ஒவ்வொருநகரிலும் ரிலையன்ஸ் 5ஜி சேவை கொண்டுவரப்படும்

14.    ஜியோவின் 5ஜி அல்ட் பைபர் சேவை மூலம் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்தப்படும். இதற்கு எந்தவிதமான வயர்களும் தேவையில்லை. இதற்கு ஜியோ ஏர் பைபர் எனப் பெயர். ஜியோ ஏர் பைபர் மூலம் வீடு, அலுவலகம் ஆகியவற்றை ஜிகாபைட்வேகத்தில் விரைவாக இணைக்க முடியும்.

15. ஆசியாவிலேயே ரிலையன்ஸ் சில்லரைவர்த்தக நிறுவனம் டாப்-10 நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆண்டுவிற்றுமுதல் ரூ.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

16.    ரிலையன்ஸ் மரபுசாரா எரிசக்தி வர்த்தகம் இந்தியாவை சர்வதேச அளவில் பெரிய ஏற்றுமதியாளராக மாற்றும். உள்நாட்டளவில் ஆராய்ச்சு மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்தும். உலகளவில் புதிய சக்தி உற்பத்தியாளராக இந்தியா மாறி, சீனாவுக்கு மாற்றாக நம்பகத்தன்மையான நாடாக இந்தியா மாறும்

17.    2023ம் ஆண்டிலிருந்து பேட்டரி பேக்கை தயாரிக்க இலக்கு வைத்துள்ளோம். 2024ம் ஆண்டில் ஆண்டுக்கு 5ஜிடபிள்ஹெச் அளவும், 2027ம் ஆண்டுக்குள் 50ஜிடபிள்ஹெச் அளவும் பேட்டரி உருவாக்கப்படும்.

இவ்வாறு முகேஷ் அம்பானி தெரிவித்தார்

 


 

click me!