chitra ramkrishna: என்எஸ்இ ஊழல்: சித்ராவுக்கு சோதனைக் காலம் ! ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்

By Pothy RajFirst Published Aug 29, 2022, 1:27 PM IST
Highlights

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற  வழக்கில் என்எஸ்இ ஊழியர்களின் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் இயக்குநரான சித்ரா ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற  வழக்கில் என்எஸ்இ ஊழியர்களின் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் இயக்குநரான சித்ரா ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

த்ரா ராம்கிருஷ்ணன் என்எஸ்இ சிஇஓவாக 2013 முதல் 2016ம் ஆண்டுவரை  இருந்த காலத்தில் கோ-லொகேஷன் ஊழல் நடந்தது. அதாவது, என்எஸ்இ சர்வர்களுக்கு அருகே சில குறிப்பிட்ட பங்கு தரகர்களின் சர்வர்கள் வைக்கப்பட்டு, பங்குபரிவர்த்தனை தகவல்கள் விரைவாகப் பகிரப்பட்டு, ஆதாயம் அடைந்ததாக புகார் எழுந்தது. 

(RIL)ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்: முகேஷ் அம்பானி அறிவிப்பு மீது எதிர்பார்ப்பு

இந்த கோலொகேஷன் ஊழல் வழக்குத் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சித்ரா ராம்கிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியன் இருவரையும் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். தற்போது இருவரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பரில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? தெரிந்து திட்டமிடுங்கள்

இதற்கிடையே  2009 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தேசியப் பங்குச்சந்தையில் பணியாற்றும் ஊழியர்களின் தொலைப்பேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. 

இது தொடர்பாக சித்ரா ராம் கிருஷ்ணன், ரவி நரேன் கேட்டுக்கொண்டதற்கின முன்னாள் மும்பை போலீஸ் ஆணையர் சஞ்சய் பாண்டே ஒட்டுக்கேட்டுள்ளனர். இந்த வழக்கில் எஸ்எஸ்இ முன்னாள் சிஇஓ நரேன், சித்ரா ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் ரவி வாரணாசி, மகேஷ் ஹால்திபூர் ஆகியோர் மீது சிபிஐ குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. 

அதானி குழும அறிவிப்பு! என்டிடிவி பங்கு 14 ஆண்டுகளில் இல்லாதஉயர்வு: அடுத்து என்ன நடக்கும்?

ஏற்கெனவே இவர்கள் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு வழக்கையும் அமலாக்கப்பிரிவு, சிபிஐ பதிவுசெய்தன.
இந்நிலையில் தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ஜாமீன் கோரி சித்ரா ராமகிருஷ்ணன் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனேனா ஷர்மா முன்னிலையில் இன்று விசாரி்க்கப்பட்டது. அப்போது விசாரணையின் போது, அமலாக்கப்பிரிவு சிறப்பு வழக்கறிஞர் என்.கே.மாத்தா வாதிடுகையில் “ 2009 முதல் 2017ம் ஆண்டுவரை ரவி நரேன், சித்ரா ராமகிருஷ்ணா, ரவி வாரணாசி, மகேஷ் ஹால்திபூர் ஆகியோர்  சதித்ததிட்டம் தீட்டி தேசியப் பங்குச்சந்தையை ஏமாற்றியுள்ளனர்.  ஊழியர்களின் தொலைப்பேசி உரையாடல்களை சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில் ஜாமீன்அளித்தால், நேரடியாகவோ அல்லதுமறைமுகமாகவோ சாட்சியங்களை சித்ரா ராம்கிருஷ்மண் கலைக்கலாம். ஆதாலல் ஜாமீன் வழங்கிடக்கூடாது” எனத் தெரிவித்தார்

இதையடுத்து, சிறப்பு நீதிபதி சுனேனா ஷர்மா, சித்ரா ராமகிருஷ்ணன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 


 

click me!