railways: indian railways:குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விதியில் மாற்றமா? ரயில்வே துறை விளக்கம்

By Pothy Raj  |  First Published Aug 17, 2022, 4:59 PM IST

குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவில் விதிகள் மாற்றப்பட்டுள்ளது குறித்து வெளியான தகவலுக்கு ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.


குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவில் விதிகள் மாற்றப்பட்டுள்ளது குறித்து வெளியான தகவலுக்கு ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

2020ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, “ 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரயில்களில் கட்டணமின்றி செல்லலாம். ஆனால், அவர்களுக்கு தனியாக படுக்கை வசதியோ அல்லது இருக்கையோ ஒதுக்க முடியாது” எனத் தெரிவித்திருந்தது.

Tap to resize

Latest Videos

‘மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போறேன்’: நெட்டிஸன்களை குழப்பிய எலான் மஸ்க்

ஒருவேளை தங்களின் 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதி தேவைப்பட்டால், வயதுவந்தோருக்கான கட்டணத்தை செலுத்தி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

பீகார் அமைச்சரவை விரிவாக்கம்: நிதிஷ் அரசில் 31 அமைச்சர்கள்: ஆர்ஜேடிக்கு அதிகம்

ஆனால், சமீபத்தில் சில ஊடகங்களில் வெளியானத செய்திகளில், ரயில்வே துறை குழந்தைகளுக்கான டிக்கெட் முன்பதிவில் விதிகளை மாற்றியுள்ளது. இதன்படி 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரயில்களில் பயணம் செய்யும்போது டிக்கெட் பெற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது குறித்து ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது

ரயில்வே துறை 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரயில்களில் பயணம் செய்யும்போது டிக்கெட் பெறுகிறது. டிக்கெட் முன்பதிவு விதியில் மாற்றம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தி முற்றிலும் பொய்யானது. தவறானது. ரயில்வே சார்பில் குழந்தைகளுக்கான டிக்கெட் முன்பதிவு விதியில் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. 

பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, 4 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதி தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி பெறலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தனியாகபடுக்கை வசதி அல்லது இருக்கை வசதி வேண்டாம் என நினைத்தால் குழந்தைகள் கட்டணமின்றி வழக்கம்போல் பயணிக்கலாம்”எனத் தெரிவித்துள்ளது.

இப்படித்தான் டோமினோஸ் பீட்ஸா தயாரிக்கிறாங்களா! ருசியின் ரகசியம் இதுவா 

ரயில்வே துறை குழந்தைகளுக்கும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கிறது என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் பெரும் ஆத்திரத்தையும் கோபத்தையும் நெட்டிஸன்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ரயில்வே துறைக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து, ட்விட் செய்தனர்.

சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில் “ பாஜக அரசுக்கு நன்றி. ஒருவயது குழந்தை ரயிலில் பயணித்தால்கூட கட்டணம் வாங்குகிறது. கர்ப்பிணிப் பெண்ணுக்கு மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை. ரயில்வே துறை இனி ஏழைகளுக்கானது அல்ல. மக்கள் பாஜகவுக்கான முழுடிக்கெட்டையும தேர்தலில் வெட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

click me!