gold rate today: தங்கம் விலை தொடர் சரிவு! 3 நாட்களில் சவரனுக்கு ரூ.500 வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Aug 17, 2022, 10:09 AM IST
Highlights

தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.500க்கு மேல் சரிந்துள்ளது. நடுத்தரக் குடும்பத்தினருக்கும், சாமானியர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகும்.

தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.500க்கு மேல் சரிந்துள்ளது. நடுத்தரக் குடும்பத்தினருக்கும், சாமானியர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகும்.

தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 6 ரூபாயும், சவரனுக்கு 48 ரூபாயும் விலை குறைந்துள்ளது. 
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,855க்கும், சவரன் ரூ.38,840க்கும் விற்கப்பட்டது.

‘மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போறேன்’: நெட்டிஸன்களை குழப்பிய எலான் மஸ்க்

தங்கம் விலை இன்று காலை 2வது நாளாக மீண்டும் சரிந்துள்ளது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 6 ரூபாய் சரிந்து, ரூ.4,849 ஆகவும், சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,792 ஆகவும் விற்கப்படுகிறது. 
கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4849ஆக விற்கப்படுகிறது. 

தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக குறைந்துள்ளது, தங்கம் வாங்குவோருக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும்தங்கம் சவரனுக்கு ரூ.500க்கு மேல் குறைந்துள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவது, டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு வலுப்பெறுவது போன்றவை தங்கம் விலை குறைவுக்கான காரணங்களாகும். 

கடந்த இரு வாரங்களாகவே கடும் ஏற்ற, இறக்கத்துடனே இருந்தது. நீண்ட நாட்களுக்குப்பின் சவரன் ரூ.39ஆயிரத்தை கடந்தது. ஆனால், அடுத்த இரு நாட்களில் திடீர் சரிவு ஏற்பட்டு, மீண்டும் ரூ.38ஆயிரத்துக்குள் சரிந்தது. 

ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் மரணமும் 400 கோடி டாலர் பங்குகளும்: அடுத்தது என்ன?

இந்தவாரத்தில் நேற்று மட்டும் கிராமுக்கு 59 ரூபாய் குறைந்தது, இன்று மீண்டும் கிராமுக்கு 6ரூபாய் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இரு நாட்களில் கிராமுக்கு ரூ.65 குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.520 சரிந்துள்ளது.

இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் விலைக் குறைவைப் பயன்படுத்தி வாங்குவது சிறந்தது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதானி குழுமம், ரூ.835 கோடிக்கு நவ்கரின் கன்டெய்னர் டெப்போவை விலைக்கு வாங்குகிறது

வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 10 பைசா குறைந்து, ரூ.63.30 ஆகவும், கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.63,300க்கும் விற்கப்படுகிறது

click me!