இந்தியாவின் வாரன் பபட் என செல்லாக அழைக்கப்படக்கூடிய ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மறைந்தபின் அவர் வைத்திருக்கும் 400 கோடி டாலர்மதிப்புள்ள பங்குகள் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவின் வாரன் பபட் என செல்லாக அழைக்கப்படக்கூடிய ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மறைந்தபின் அவர் வைத்திருக்கும் 400 கோடி டாலர்மதிப்புள்ள பங்குகள் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியப் பங்குச்சந்தையின் தந்தை என்று அன்பாக அழைக்கப்படும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஏற்கெனவே பல உடல் உபாதைகளுடன் இருந்த ஜூன்ஜூன்வாலா உயிரிழந்தபின், அவர் சமீபத்தில் தொடங்கிய ஆகாசா ஏர் விமான சேவை, அவரின் பங்குகள் குறித்து பங்குச்சந்தையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படித்தான் டோமினோஸ் பீட்ஸா தயாரிக்கிறாங்களா! ருசியின் ரகசியம் இதுவா
62 வயதான ஜூன்ஜூன்வாலா ஏராளமான நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்துள்ளார், இந்தியாவின் பல நிறுவனங்களின் நிர்வாகக்குழுவிலும் இருந்துள்ளார்.
குறிப்பாக ஜூன்ஜூன்வாலாவும், அவரின் மனைவி ரேகா ஜூன்ஜூன்வாலாவும் டாடா நிறுவனத்தின் டைட்ன் நிறுவனத்தில் மட்டும் 140 கோடி டாலருக்கு பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இது தவிர ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைட் இன்சூரன்ஸில் 88.40 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகள், மெட்ரோ பிராண்ட்களில் 28.10 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகள், டாடா மோட்டார்ஸில் 26.20 கோடி மதிப்புள்ள பங்குகள், கிரிசிலில் 16.40 கோடி பங்குகள், போர்டிஸ் ஹெல்த்கேரில் 11.30 கோடி பங்குகளை ஜூன்ஜூன்வாலா வைத்துள்ளார். இதில் ஜூன்ஜூன்வாலா ஸ்டார் ஹெல்த், ஆப்டெக், நசாரா ஆகியவற்றில் 10 சதவீதத்துக்கும் மேல் பங்குகளை வைத்துள்ளார்.
அதானி குழுமம், ரூ.835 கோடிக்கு நவ்கரின் கன்டெய்னர் டெப்போவை விலைக்கு வாங்குகிறது
ஜூன்ஜூன்வாலா கைவசம் வைத்திருக்கும் நிறுவனப் பங்குகள் இன்று பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. குறிப்பாக டைட்டன் நிறுவனப்பங்குகள் ஒருசதவீதம் உயர்ந்தன, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் 2.5சதவீதமும் உயர்ந்தது. ஆப்டெக் பங்குகள் 5 சதவீதமும் சரிந்தன.
ஜூன்ஜூன்வாலா மறைந்தபின் அவர் வைத்திருக்கும் நிறுவனங்களின் பங்குகள் நிலைமை என்னவாகும். பங்குகள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுமா அல்லதுமீண்டும் விற்பனைக்கு வருமா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஒருவேளை ஜூன்ஜூன்வாலா பங்குகள் சந்தைக்கு மீண்டும் விற்பனைக்கு வந்தால் அது சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதும் தெரியவில்லை.
ரூ. 5,000த்தை ரூ. 31,904 ஆயிரம் கோடியாக உயர்த்திய பிக் புல் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா!!
வெல்த்மில்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆலோசகர் கிராந்தி பத்தினி கூறுகையில் “ பல நிறுவனங்களில் ஜூன்ஜூன்வாலா பங்குகளை வைத்திருந்தாலும் எந்த நிறுவனத்திலும் நேரடி நிர்வாகத்தில் அவர் ஈடுபடவில்லை.ஆதலால், அவரின் வைத்திருக்கும் பங்குகளால் சந்தையில் எந்தவிதமான பெரித தாக்கமும் ஏற்படாது” என்று தெரிவித்துள்ளார்.