bihar cabinet minister: பீகார் அமைச்சரவை விரிவாக்கம்: நிதிஷ் அரசில் 31 அமைச்சர்கள்: ஆர்ஜேடிக்கு அதிகம்

By Pothy RajFirst Published Aug 16, 2022, 12:19 PM IST
Highlights

பீகாரில் புதிதாக அமைந்த நிதிஷ் குமார், தேஜஸ்வி கூட்டணியில் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் புதிதாக 31 பேருக்குஅமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் இடம் பெற்றனர்.

பீகாரில் புதிதாக அமைந்த நிதிஷ் குமார், தேஜஸ்வி கூட்டணியில் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் புதிதாக 31 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர். இவர்களுக்கு ஆளுநர் சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

. இதில் பெரும்பாலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் அதிக இடம் வழங்கப்பட்டது. 

பீகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடந்த 2 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. ஆனால், நிதிஷ் குமாரின் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஆர்பிசி சிங் மூலம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைக்க  பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

மீண்டும் பதற்றத்தில் கர்நாடகா! ஷிவமோகாவில் ஒருவருக்கு கத்திக்குத்து 144 தடை உத்தரவு

இதனால் உஷாரான முதல்வர் நிதிஷ் குமார், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதுமட்டுமல்லாமல், எதிர்க்கட்சியாக இருந்த, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார். முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவும் பதவி ஏற்றனர்.

நலத்திட்டங்களை இலவசங்கள் என கொச்சைப்படுத்துவது வேதனை: பாஜகவை கிழித்த தெலங்கானா முதல்வர்

இந்நிலையில் பீகாரில் நிதிஷ் குமார் அரசின் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடந்தது. இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 16 பேருக்கு அமைச்சர் பதவியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 11 பேருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்களும், ஜித்தன் ராம் மாஞ்சி கட்சியான இந்துஸ்தான் அவாமி மோர்ச்சாவுக்கு ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.இது தவிர சுயேட்சை எம்எல்ஏ சுமித் குமார் சிங்கிற்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

பில்கிஸ் பானு பலாத்காரம், கொலை வழக்கு: குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்தது குஜராத் அரசு

ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஷரவண குமார், அசோக் சவுத்ரி, லேசி சிங், விஜயகுமார் சவுத்ரி, பிஜேந்திர யாதவ் அமைச்சராகப் பதவி ஏற்றார். 

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சுரேந்திர பிரசாத் யாதவ், ராமானந்த் யாதவ், தேஜ் பிரதாப்யாதவ், அலோக் மேத்தா ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபேக் ஆலம் அமைச்சராகப் பொறுப்பேற்றார். 
 

click me!