அதானி போர்ட்ஸ் மற்றும் சிற்பபு பொருளாதார மண்டலம் லிமிட் நிறுவனத்தின் துணை நிறுவமான அதானி லாஜிஸ்டிக்ஸ் ரூ.835 கோடிக்கு கன்டெய்னர் டெப்போவை விலைக்கு வாங்குகிறது.
அதானி போர்ட்ஸ் மற்றும் சிற்பபு பொருளாதார மண்டலம் லிமிட் நிறுவனத்தின் துணை நிறுவமான அதானி லாஜிஸ்டிக்ஸ் ரூ.835 கோடிக்கு கன்டெய்னர் டெப்போவை விலைக்கு வாங்குகிறது.
குஜராத்தைச் சேர்ந்த நவ்கர் கார்ப்பரேஷனின் ஐடிசி டம்ப்பை அதானி லாஜிஸ்டிக்ஸ் விலைக்கு வாங்குகிறது. ஐசிடி டம்ப் என்பது உள்நாட்டளவில் மிகப்பெரிய கன்டெய்னர் டெப்போவாகும். இதன் கொள்ளளவு என்பது 0.5 மில்லியன் டிஇயு.
நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வருவாய் ஏப்ரல்-ஜூலையில் 40 % அதிகரிப்பு
குஜராத்தின் ஹசாரியா துறைமுகம் மற்றும் வஹாசேவாதுறைமுகத்துக்கு இடையே நவ்கர் கார்ப்பரேஷனின் ஐடிசி டம்ப் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தை முறைப்படி வாங்கும் ஒப்பந்தம் என்பது நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டுக்குள் முடிந்துவிடும் என்று தெரிகிறது.
இந்தியா முழுவதும் சரக்குப் போக்குவரத்தை வேகப்படுத்தவும், விரிவுபடுத்தவும் ஐசிடி டம்ப்பை அதானி குழுமம் விலைக்கு வாங்குகிறது. நவ்கர் கார்ப்பரேஷனின் ஐசிடி டம்ப் ஏறக்குறைய 129ஏக்கரில் அமைந்துள்ளது. தேவைப்பட்டால் எதிர்காலத்தில் டெப்போவை விரிவுபடுத்தவும் முடியும். இந்த டம்ப் ஐசிடிக்குள் 4 சரக்கு ரயில்கள் சென்று வரக்கூடிய அளவுக்கு இடவசதி இருக்கிறது.
ரூ. 5,000த்தை ரூ. 31,904 ஆயிரம் கோடியாக உயர்த்திய பிக் புல் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா!!
அதானி லாஜிஸ்டிக்ஸ் சிஇஓ கரன் அதானி கூறுகையில் “ அதானி குழுமம், ஐசிடி டம்ப் கன்டெய்னர் டெப்போ விலைக்கு வாங்குவதன் மூலம் முழுமையான சரக்குப் போக்குவரத்துக்கு மாறும். பரபப்பாக இயங்கக்கூடிய ஹசாரியா, ஹவசேவா துறைமுகத்துக்கு இடையே இந்த கன்டெய்னர் டெப்போ அமைந்துள்ளதால், சரக்குப் போக்குவரத்து அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்
சில நிமிடங்கள் செலவிடுங்க! பிஎப் சந்தாதாரர் வீட்டிலிருந்தே ஆன்லைனில் UAN எண் பெறலாம்: எப்படி?
மேற்கு கடற்கரைப்பகுதியில் 6 பொருளாதார சிறப்பு மண்டங்களில் அதானி துறைமுகம் அமைந்துள்ளது. முந்த்ரா, தாஹேஜ், துனா, ஹசாரியா, மர்மகோவா, மகாராஷ்டிராவின் திக்னி ஆகிய இடங்களிலும் கிழக்கு கடற்கரையில் ஒடிசாவின் தம்ரா, விசாகப்பட்டிணத்தின் ஞானவரம், ஆந்திராவின் கிருஷ்ணாபட்டினம், தமிழகத்தில்எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகியவற்றில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர கேரளாவில் விழிஞ்சம், இலங்கையில் கொழும்புவிலும் துறைமுகத்தை அதானிகுழுமம் தயார் செய்து வருகிறது