தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீரெனக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.300க்கு மேல் அதிரடியாக குறைந்துள்ளதால், சாமானியர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகும்.
தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீரெனக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.300க்கு மேல் அதிரடியாக குறைந்துள்ளதால், சாமானியர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகும்.
தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 38 ரூபாயும், சவரனுக்கு 304 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,914க்கும், சவரன் ரூ.39,312க்கும் விற்கப்பட்டது.
direct tax: நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வருவாய் ஏப்ரல்-ஜூலையில் 40 % அதிகரிப்பு
தங்கம் விலை இன்று காலை அதிரடியாகக் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 38 ரூபாய் சரிந்து, ரூ.4,876 ஆகவும், சவரனுக்கு ரூ.304 குறைந்து, ரூ.39,008 ஆகவும் விற்கப்படுகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4876ஆக விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த இரு வாரங்களாகவே கடும் ஏற்ற, இறக்கத்துடனே இருந்து வருகிறது. விலையைக் கணிக்க முடியாத அளவில் தினசரி மாற்றத்துடனே இருந்து வந்தது. கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக விலை உயர்ந்து, நீண்ட நாட்களுக்குப்பின் சவரன் ரூ.39ஆயிரத்தை கடந்தது.
சில நிமிடங்கள் செலவிடுங்க! பிஎப் சந்தாதாரர் வீட்டிலிருந்தே ஆன்லைனில் UAN எண் பெறலாம்: எப்படி?
ஆனால், அடுத்த இரு நாட்களில் திடீர் சரிவு ஏற்பட்டு, மீண்டும் ரூ.38ஆயிரத்துக்குள் சரிந்தது. இந்தவாரத் தொடக்கமான நேற்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால், இன்று திடீரென சவரனுக்கு ரூ.300க்கு மேல் குறைந்து, ஏறக்குறைய மீண்டும் ரூ.38 ஆயிரம் நிலைக்கு அருகே வந்துள்ளது.
இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் சிறிது தயக்கத்துடனே அணுக வேண்டிய நிலையில் உள்ளனர். நாளை மீண்டும் குறையுமோ அல்லது அதிகரிக்குமோ என்ற தயக்கத்துடனே தங்கம் வாங்குகிறார்கள்.
தங்கம் விலை எவ்வளவு மாறும் என்று கணிக்க முடியாத நிலையில் தினசரி விலை நகர்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் காட்டில் மழை: ரூ.2999க்கு ரீசார்ஜ், ரூ.3000க்கு இலவசங்கள்
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.ஒரு ரூபாய் குறைந்து, ரூ.63.80 ஆகவும், கிலோவுக்கு ரூ.ஆயிரம் குறைந்து ரூ.63,800க்கும் விற்கப்படுகிறது