
வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சவரன் மீண்டும் ரூ.39ஆயிரத்துக்கு மேல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,914க்கும், சவரன் ரூ.39,312க்கும் மாற்றமில்லாமல் இருக்கிறது
ரூ. 5,000த்தை ரூ. 31,904 ஆயிரம் கோடியாக உயர்த்திய பிக் புல் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா!!
தங்கம் விலை சனிக்கிழமை திடீரென கிராம் ஒன்றுக்கு 24 ரூபாயும், சவரனுக்கு சவரனுக்கு ரூ.192 அதிகரித்தது, ரூ.39,312க்கும் விற்பனையானது. இந்த விலையிலேயே மாற்றமில்லாமல் நீடிக்கிறது
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4914ஆக விற்கப்படுகிறது.
பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்; பிரதமர் இரங்கல்!!
தங்கம் விலை கடந்த வாரம் முழுவதும் கடும் ஏற்ற, இறக்கத்துடனே இருந்தது. முதல் இரு நாட்கள் உயர்வு, அதன்பின் சரிவு, பின்னர் மீண்டும் விலை ஏற்றம் என நிலையற்றதாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப்பின் சவரன் ரூ.39ஆயிரத்தை கடந்து பின்னர் மீண்டும் ரூ.38ஆயிரத்துக்குள் சரிந்தது.
தங்கம் விலை எவ்வளவு மாறும் என்று கணிக்க முடியாத நிலையில் தினசரி விலை நகர்கிறது. வரும் நாட்களில் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவின் வாரன் பபெட்.. இந்த விஷயத்தில் கில்லியாக அறியப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா யார்?
வெள்ளி விலையும் இன்று மாற்றமில்லாமல் நகர்கிறது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.64.80 ஆகவும், கிலோ ரூ.64,800க்கும் விற்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.