
இபிஎப்ஓ சந்தாதாரர்கள் வீட்டிலிருந்தே படியே தங்களுடைய யுஏஎன்(UAN) எண்ணை ஆன் லைன் மூலம் சில நிமிடங்களில் பெறலாம். இதன் மூலம் பிஎப் கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் பெற முடியும்.
ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவுடன், அவருக்கு அரசின் சமூகப் பாதுகாப்பு நலத்திட்டங்களுக்குள் வந்துவிடுவார். அந்த வகையில் தொழிலாளர்களுக்கு முக்கியமானது, பிஎப் கணக்காகும். பிஎப் கணக்கு தொடங்கியபின் அதை நிர்வகிக்க ஒவ்வொருவரும் 12 இலக்க யுஏஎன் எண்ணை வைத்திருப்து அவசியமாகும்.
ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் காட்டில் மழை: ரூ.2999க்கு ரீசார்ஜ், ரூ.3000க்கு இலவசங்கள்
இந்த யுஏஎன் எண்ணை எளிதாக வீட்டில் இருந்தபடியே ஆன்-லைன் மூலம் உருவாக்கலம். யுஏஎன் இருந்தால்தான் பிஎப் கணக்கில் உள்ள பணம், வட்டி, டெபாசிட், கடன் உள்ளிட்டவற்றைக் காணமுடியும்.
யுஏஎன் ஆன்லை் மூலம் பெறுவது எப்படி
1. ஆதார் எண், ஆதார் எண்ணை இணைத்த மொபைல் எண். இந்த மொபைல் பிஎப் கணக்கில் அளிக்கப்பட்டிருத்தல் அவசியம்.
2. இபிஎப் இணையதளத்துக்குள் சென்று உறுப்பினர் இ-சேவைக்குள், இருக்கும், ஆக்டிவேட் யுஏஎன் என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
தங்கம் விலை திடீர் உச்சம்: மீண்டும் சவரன் 39ஆயிரத்துக்கு மேல் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?
3. ஆதார் எண்ணை கிளிக் செய்து, ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும்.
4. பின்னர் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், கேப்சா உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.
5. இந்த விவரங்களை அளித்தபின், பின் எண் வரும் ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
6. அதன்பின், புதிய திரை உருவாகி, நாம் அளித்த விவரங்கள் அனைத்தும் சரியானதுதானா என்று கேட்கும். அதை உறுதிசெய்ய வேண்டும்.
7. அதன்பின் அக்ரீ என்ற பட்டனை கிளிக் செய்தால், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் வரும்.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 2023லிருந்து பவுடர் விற்பனையை நிறுத்துகிறது
8. ஓடிபி எண்ணை பதிவு செய்து, ஆக்டிவேட் யுஏஎன் என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
9. இவை அனைத்தும் முடிந்தபின், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு, பிஎப் எண், யுஏஎன் ஆகியவை அடங்கிய மெசேஜ்அனுப்பி வைக்கப்படும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.