75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளது. ஓர் ஆண்டுக்கு மொத்தமாக ரூ.2,999க்கு ரீசார்ஜ் செய்தால், ரூ.3 ஆயிரத்துக்கான இலவசங்களை அளிக்கிறது.
75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளது. ஓர் ஆண்டுக்கு மொத்தமாக ரூ.2,999க்கு ரீசார்ஜ் செய்தால், ரூ.3 ஆயிரத்துக்கான இலவசங்களை அளிக்கிறது.
என்ன நம்பமுடியில்லையா! ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். ரிலையன்ஸ் ஜியோநிறுவனம் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ ஜியோவுடன் சுதந்திரதினத்தைக் கொண்டாடுங்கள். சுதந்திரசலுகையாக ஆண்டு ரீசார்ஜ் ரூ.2999க்கு செய்து, ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள இலவசங்களைப் பெறுங்கள்” எனத் தெரிவித்துள்ளது.
இலவசமாக நெட்பிளிக்ஸ் சந்தா வேணுமா? ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த சூப்பர் திட்டத்தில் சேருங்க
இதன்படி ரூ.2999க்கு ஒரு ப்ரீபெய்ட் சந்தாதாரர் ரீசார்ஜ் செய்தால் அவருக்கு ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள இலவசங்கள் கிடைக்கும். அதாவது, தினசரி 100 எஸ்எம்எஸ், 365 நாட்களுக்கும் தினசரி 2.5ஜிபி டேட்டா. ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள, ஜியோ சினிமா,ஜியோ டிவி, ஜியோ க்ளவுட் கிடைக்கும்.
அது மட்டுமல்லாமல் ரூ.750 மதிப்புள்ள Ixigo தள்ளுபடி கூப்பன், Ajioவில் ரூ.750க்கு தள்ளுபடி கூப்பன், நெட்மெட்ஸில் ரூ.750 க்கு தள்ளுபடி கூப்பன், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஓர் ஆண்டுக்கு சந்தா, கூடுதலாக 75 ஜிபி டே்டா. இவை அனைத்தும் கிடைக்கும்.
இதில் முக்கியமாக தினசரி வழங்கப்படும் 2.5 ஜிபி டேட்டா தீர்ந்தவுடன், இன்டர்நெட் வேகம் குறைந்துவிடும். இது தவிர ஆண்டு ரீசார்ஜாக ரூ.2879, ரூ.2,545 திட்டம் ஆகியவை உள்ளன.
இதில், 2,879 திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோவின் பல்வேறு ஆப்ஸ் சலுகைகள், சேவைகள் இலவசம்.
: தங்கம் விலை திடீர் உச்சம்: மீண்டும் சவரன் 39ஆயிரத்துக்கு மேல் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?
ரூ.2,545 ரீசார்ஜ் திட்டத்தில், 336 நாட்களும் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் .இது தவிர ஜியோடிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட், ஜியோசெக்யூரிட்டி ஆகியவையும் கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் 5ஜி சேவையைத் தொடங்க உள்ளது. இதற்காக நடந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.80ஆயிரம் கோடிக்கு மேல் ஏலம் எடுத்துள்ளது. இதன்படி வரும் 15ம் தேதி சுதந்தினத்தன்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவையைத் தொடங்கும்.
சந்தை வல்லுநர்கள் கருத்துப்படி, 4ஜி பிளான்களைவிட, 5ஜியில் பிளான் விலை அதிகமாகும் என்று தெரிவித்துள்ளனர். ஜியோ சுதந்திர ப்ரீபெய்டு திட்டங்களை எளிதாகப் பெறுவதற்கு ஜியோவின் இணையதளத்துக்குச் சென்று ரீசார்ஜ் செய்வது எளிய வழிமுறை.
பேஸ்புக் மவுசு குறையுதா! 7 ஆண்டுகளில் பயன்பாடு 32 சதவீதமாக வீழ்ச்சி: என்ன காரணம்?
ஸ்மார்ட்போன் இருந்தால் மைஜியோ செயலிக்குள் சென்று சுதந்திரன ரீசாராஜ் திட்டத்தை தேர்வுச செய்து ரீசார்ஜ் செய்யலாம். மற்ற அனைத்து சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த 3 நாட்களில் கிடைத்துவிடும்.